Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து வரி.. குடிநீர் வரியை செலுத்திட்டீங்களா.. இதோ இப்படியும் செலுத்தலாம்.. அதென்ன கியூ.ஆர் வசதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்தி சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து அதிகாரிகள் சில முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.

மக்களுக்கு தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கடைகளில் கியூ.ஆர்.கோடு மூலமும் பணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

property tax and water tax can be paid by scanning the qr code in chennai corporation, what are the specials

கியூ ஆர் கோடு: இந்த கியூ ஆர் கோடு என்பது என்ன? ஆதார் கார்டுகளிலும்கூட, இந்த க்யூ ஆர் கோடு இருக்கும்.. ஆனால், இது நம் கண்களுக்கு தெரியாது.. QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும்.. இது ஜப்பான் நாட்டில் தோன்றி, இன்று உலகம் முழுவதும் அனைவராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாக மாறிவிட்டது..

இவற்றில் உள்ள குறியீடுகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் சரரங்களின் வரிசையை கொண்ட இயந்திரம், படிக்கக்கூடிய குறியீட்டில் இருக்கும், இந்த QR Codeல் இணையதள முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்வற்றை மறைக்குறியாக்கம் செய்யலாம். பெரிய வணிகவளாகங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள்வரை க்யூ.ஆர் கோடு அட்டையில் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தும் முறையை பின்பற்றுகின்றன.

ஸ்கேனிங் முறை: க்யூ.ஆர் கோடு என்பது வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை உடனடியாக செலுத்துவதற்கான வசதியாகும்.. (Quick Response). ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து, யாருக்கு பணம் செலுத்தவேண்டுமோ, அவர்களின் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் முறை ஆகும். இந்த முறை வந்தபிறகு, எப்போதும் கையில் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

property tax and water tax can be paid by scanning the qr code in chennai corporation, what are the specials

சேவைகள்: இப்போது விஷயம் என்னவென்றால், சென்னையில் கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்தி சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது... மின்ஆளுமை மற்றும் ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கியூ.ஆர். குறியீடு மூலம் பொது மக்கள் சேவைகளை செயல்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த புதிய வசதி தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சொன்னதாவது:

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற்றில் 80 லட்சம் நுகர்வோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் வீடுகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும். அதன் மூலம் பொதுமக்கள் ஸ்கேன் செய்து குடிநீர் வரி, சொத்து வரியை கட்டலாம். மாநகராட்சி பணிகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தாலும் இந்த கியூ.ஆர். குறியீடு மூலம் தெரிவிக்கலாம். இதற்கு முன்பு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்துக்கு குறைகள் தொடர்பாக புகார் செய்ய ஒவ்வொரு முறையும் அதிகாரிகளின் நம்பரை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அல்லது நேரில் செல்ல வேண்டும். இவை இரண்டுமே கடினமானது.

கியூ.ஆர்.குறியீடு: அந்தவகையில், வெயில் காலத்திலும், பருவமழை காலத்திலும், இந்த வசதி பயனுள்ளதாக அமையும். இந்த கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், பொதுவான குறைகளை பதிவு செய்தல், திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல், வர்த்தக உரிமம் பெறுதல் போன்றவை தொடர்பாகவும் கியூ.ஆர். குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குடியிருப்புகள் தவிர பஸ் நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மயானங்கள், சமூக நல மையங்கள் மற்றும் பொது கழிப்பறைகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும். இது தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தில் புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்வு காண்பதற்காக அனுப்பப்படும்" என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+