Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட போகும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்.. கவனிக்க வைத்த 3 பேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான் என்று சில தொகுதிகள் வெளியாகி உள்ளது. அதன்படி கரூர், திருச்சி, தேனி ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

2024 லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்துள்ளது. இதுதவிர கடந்த சட்டமன்ற தேர்தலில் இடம் பெற்று இருந்த மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, சமத்துவ மக்கள் கழகம் போன்ற கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்ளன.

Proposed list of Tamil Nadu Congress candidates for Lok Sabha election 2024

கூட்டணிகளுக்கான பேச்சு வார்த்தையை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, ஆ.ராசா எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய குழுவினர், கூட்டணி கட்சியை சேர்ந்த தொகுதி பங்கீட்டு குழுவினருடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் (உதய சூரியன் சின்னம்) ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் கடந்த முறை போலவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் மற்றும் மதுரை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கோவையில் வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த முறை திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது.. இந்த முறை திமுகவே நேரடியாக கோவையில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் மதிமுகவிற்கு ஒரு இடமும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த கட்சி விரும்பும் தொகுதி கிடைக்கும் என்கிறார்கள்.. அனேகமாக விருதுநகர் தொகுதியை மதிமுக கேட்டு வாங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ராஜ்ய சபா எம்பி தேர்தலில் ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுச்சேரியில் ஒன்று என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த லோக்சபா தேர்தலை போன்று தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் சேர்த்து மொத்தம் 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக திமுக அறிவித்தது. முன்னதாக 10 தொகுதியை தர திமுக விரும்பவில்லை.. புதுச்சேரியையும் சேர்த்து 7 தொகுதிகள் மட்டுமே தர விரும்பியிருக்கிறது. ஆனால் கடும் முயற்சி செய்தே திமுகவிடம் 10 தொகுதிகளை காங்கிரஸ் வாங்கி உள்ளது..

இதன்படி திமுக கூட்டணியை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 18 இடங்கள் பகிர்ந்து அளித்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் இறங்க உள்ளது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளுக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, சிவகங்கை, விருதுநகர், கரூர் மற்றும் திருச்சி என 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 இடங்களில் போட்டியிட்டது. இதில், தேனி தொகுதியை தவிர எஞ்சிய 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி கடந்த முறை வெற்றி பெற்றது.

காங்கிரஸ் இந்த முறை 10 தொகுதிகளை பெற்றுள்ள போதிலும், கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட கரூர், திருச்சி, தேனி ஆகிய 3 தொகுதிகள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கைமாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள 10 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த தொகுதிகளில் யார்-யார்? போட்டியிட உள்ளனர் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரியில் விஜய் வசந்த், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரம், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் கடந்த தேர்தலை போல் இந்த தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆரணியில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் டாக்டர் விஷ்ணுபிரசாத் அல்லது தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் வக்கீல் சுதா ராமகிருஷ்ணன் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

திருவள்ளூர் தொகுதியில் ஜெயக்குமார் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதில் சசிகாந்த் செந்தில் அல்லது முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் போட்டியிடக்கூடும் என்கிறார்கள். அதேபோல, தேனி தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை ஒதுக்கப்பட்டு அதில் அகில இந்திய தொழில் வல்லுனர்கள் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

கரூர் தொகுதிக்கு பதில் ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு அதில் ஜோதிமணியும், திருச்சி தொகுதிக்கு பதில் கடலூர் ஒதுக்கப்பட்டு அதில் திருநாவுக்கரசர் அல்லது வேறு யாராவது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்கிறார்கள். அதே நேரத்தில், புதுச்சேரியில் ஏற்கனவே எம்.பி.யாக இருக்கும் வைத்திலிங்கமே போட்டியிட உள்ளதாகவும் சொல்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாகக்கூடும் என்று சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+