அமித்ஷா வந்த போது கரண்ட் கட்..காரணம் கேட்ட உள்துறை அமைச்சகம்..மின்வாரியம் சுற்றறிக்கை
சென்னை: முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
விஐபி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்களும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 10ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகை புரிந்தார். கடந்த 10 ஆம் தேதி இரவு விமான மூலம் அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது விமான நிலையத்தின் வெளியே ஜிஎஸ்டி சாலையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து அமித்ஷா காரில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையபகுதியே இருளில் மூழ்கியது. இதனால் தொண்டர்கள் அமிஷாவை பார்க்க முடியாத நிலை உருவானது. இருந்த போதும் அமித்ஷா காரில் இருந்து இறங்கி அமித்ஷா பாஜக தொண்டர்களை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனையடுத்து திடீரென ஏற்பட்ட மின்வெட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக தொண்டர்கள் விமான நிலையம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாஜகவினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இது தொடர்பாக மின்வாரியம் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. அதில் மின் பழுது காரணமாக திடீரென மின்வெட்டு ஏற்பட்டதாகவும் உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மின்வெட்டு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து சென்னை மின் நிலையத்தில் அமித்ஷா வரும் பொழுது மின்வெட்டு ஏற்படுவது காரணம் என்ன என அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு மத்திய உள்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும், மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் . மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையின் போது மின்தடை ஏற்பட்ட நிலையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் , முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது பிரதான அரசு நிகழ்வுகளின் போதும், மின்வாரிய அதிகாரிகள் நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விஐபி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்களும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications