Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடிக்காம இருக்க முடியலையா.. கைகால் உதறுதா.. டாக்டர் சுபா சார்ல்ஸ் சொல்ற ஆலோசனைய கேளுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் மனநல மருத்துவர் சுபா சார்ல்ஸ் மது பிரியர்களுக்கு என அட்டகாசமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

Recommended Video

    குடிக்காமல் இருக்க முடியவில்லையா?-கவலை வேண்டாம் | Oneindia Tamil

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸின் கோர தாண்டவத்திற்கு உலகம் முழுக்க 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவு

    இந்தியாவில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனாலும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வராததால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க அரசு முடிவு செய்திருக்கிறது.

    மது போதைக்காக..

    மது போதைக்காக..

    ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிக்க முடியாமல் தவித்த மது பிரியர்கள் போதைக்காக வார்னிஷ், ஷேவிங் லோஷன், சானிடைசர் என கையில் கிடைத்தையெல்லாம் குடித்து வருகின்றனர். இதனால் சிலர் மரணத்தையும் தழுவியிருக்கின்றனர்.

    சுபா சார்ல்ஸ்

    சுபா சார்ல்ஸ்

    இந்நிலையில் மது பிரியர்கள் ஊரடங்கு காலத்தை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், கொரோனா பற்றிய செய்திகளை பார்ப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவது எப்படி என்பது குறித்து மன நல மருத்துவர் சுபா சார்ல்ஸ் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

    கொரோனா செய்தி

    கொரோனா செய்தி

    அவர் பேசியிருப்பதாவது, சிலருக்கு கொரோனா என்றாலே பயம்.. 10 நிமிடத்திற்கு ஒருமுறை டிவி பார்ப்பார்கள். எத்தனை பேருக்கு பரவியிருக்கு? எத்தனை பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்? என்பதை தொடர்ந்து பார்த்து வருவார்கள். அப்படி அடிக்கடி பார்ப்பதால் உங்களுக்கு நல்லதா? இல்லை. காலையில் ஒரு முறை பாருங்க. முடிந்தால் மாலை ஒரு முறை பாருங்கள். அதை தாண்டி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    கட்டுப்படுத்த போகிறீர்களா?

    கட்டுப்படுத்த போகிறீர்களா?

    அப்படி பார்த்து பார்த்து நீங்கள் என்ன அதனை கட்டுப்படுத்த போகிறீர்களா? நீங்கள் என்ன கலெக்டரா? அல்லது அமைச்சரா அதனை அடிக்கடி பார்க்க. பார்க்க வேண்டியவர்கள் பார்த்தால் போதும். சந்தோஷமா இருக்க வேண்டியவர்கள் சந்தோஷமா இருங்கள். அப்படி இருந்தால் தான் அவர்கள் எஃபெக்டிவாக வேலை பார்க்க முடியும். மனுஷன பார்த்தாலே பயப்படும் படியான சூழல் உருவாகியிருக்கிறது.

    மனதுக்கு பிடிக்காததை

    மனதுக்கு பிடிக்காததை

    துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலர் இந்த வைரஸுடன் நெருங்கி உறவாட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு விஷயத்தை பார்த்தால் பயமாக இருக்கிறதா? மனதுக்கு பிடிக்கவில்லையா.. அப்படியென்றால் பார்க்காதீர்கள். மனசு தைரியமாகட்டும். மனதுக்கு பிடிக்காதை, மனது பயப்படும் விஷயத்தை செய்து மேலும் அதனை பயமுறுத்தாதீர்கள்.

    எதிராக மாறாதீர்கள்

    எதிராக மாறாதீர்கள்

    காந்திஜி சொன்னதை போல பிடிக்காததை பேசாதீர்கள், பார்க்காதீர்கள். 10 மாத குழந்தையை போல சந்தோஷமாக இருங்கள். உங்கள் மனதுக்கு பிடிக்காததை செய்து, உங்களுக்கு நீங்களே எதிராக மாறாதீர்கள்.. நல்ல விஷயங்களை பாருங்ருள், சிரியுங்கள்.. மனசை சந்தோஷப்படுத்துவதை பாருங்கள்.. இவ்வாறு கூறினார் மருத்துவர் சுபா சார்லஸ்.

    மது கடிக்கும பழக்கம்

    மது கடிக்கும பழக்கம்

    இதேபோல் மதுவுக்கு அடிமையானவர்கள், மது அருந்தாமல் இருப்பது எப்படி என்பது குறித்த கேள்விக்கும் அசத்தலான ஆலோசனைகளை கூறியிருக்கிறார் சுபா சார்லஸ். அவர் பேசியதாவது, சிலர் 15 வயதிலேயே மது குடிக்க ஆரம்பிப்பார்கள்.. சிலர் நண்பர்கள் மூலம் குடிக்க பழகுவார்கள். பின்னர் கவலைப்படும் போதும் டென்ஷன் ஆகும் போதும் குடிக்க தொடங்குவார்கள். மதுவுக்கு அடிமையாகமல் கன்ட்ரோல் பண்ணிக்கொள்ளலாம் என்று ஆரம்பிப்பார்கள், ஆனால் கன்ட்ரோல் பண்ண முடியாது.

    பைத்தியம் பிடிக்குதா?

    பைத்தியம் பிடிக்குதா?

    மதுவை அவாய்ட் பண்ணுவதுதான் நல்லது. முதலில் மனதுக்கு இதமாக இருக்கும். பின்னர் உடலும் அடிமையாகிவிடும். குடிக்காவிட்டால் கைக்கால் உதறுது, பைத்தியம் பிடிக்குது என்ற நிலைக்கு போகும் போது எதையாவது குடித்து விடுவார்கள். போதை தருவதை கிக் தருவதை குடிப்பார்கள். குடித்து உடல் உறுப்புகள், குடல் உள்ளிட்டவை புண்பட்டு இருக்கும்.

    ஆண்மை போய்விடும்

    ஆண்மை போய்விடும்

    அதனை இதுபோன்ற ஊரடங்கு நேரத்தில் குடிக்காமல் இருக்க பழகிக்கொள்ளுங்கள். குடித்து குடித்து வந்த த்ரில்லை குடிக்காமல் இருந்து த்ரில்லாக்க பாருங்கள். நல்ல சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். போதைக்கு அடிமையானால் ஆண்மை போய்விடும். ஆண்மை போனால் சந்தேகம் ஏற்படும். குடி குடியை கெடுத்து விடும்.

    ஒரே நாளில்..

    ஒரே நாளில்..

    21 நாட்களில் உங்கள் உடம்பு மது இல்லாமல் இருக்க பழகிக்கொள்ளும். ஒரே நாளில் மதுப்பழக்கத்தை விட்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். மது இல்லாமல் உங்களாலும் இருக்க முடியும் வாழ முடியும். அதற்கு இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கூறியிருக்கிறார் மன நல மருத்துவர் சுபா சார்லஸ்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+