கோபமடைந்த பிடிஆர் “நான்சென்ஸ்.. டைம் வேஸ்ட்” -தமிழகம் திவாலாகிறதா? என பாஜக நிர்வாகி கேட்டதால் ஆவேசம்
சென்னை: பெருக்கல் கணக்கு கூட தெரியாத பெரியவர்களின் முட்டாள்தனத்துக்கு ஒரு நானோ நொடியை கூட இழக்க மாட்டேன் என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் ஆபத்தானது என்றும், அதனை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் இதனை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் திமுகவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.

தலைமை நீதிபதி
இந்த வழக்கை சில நாட்களுக்கு விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கடமை. இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான கேள்வியும் உள்ளது." என்றார்.

இந்தியா டுடே விவாதம்
இந்த நிலையில் இந்தியா டுடே ஆங்கில தொலைக்காட்சியில், இலவச திட்டங்கள் தொடர்பாக விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது இலவசங்கள் திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை முன்வைத்து நெறியாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.

பிடிஆர் பேச்சு
இதற்கு பதிலளித்த பழனிவேல் தியாகராஜன், "எதன் அடிப்படையில் நீங்கள் சொல்வதை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள்? அரசியலமைப்பின் அடிப்படையிலா? அல்லது இதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளீர்களா? அல்லது நீங்கள் பொருளாதாரத்தில் பி.எச்.டி முடித்துள்ளீர்களா? அல்லது நோபல் பரிசைதான் வைத்திருக்கிறீர்களா? எங்களை விட சிறந்தவர்கள் என்று சொல்ல உங்களிடம் ஏதாவது இருக்கா? பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்று கடனை குறைத்து, வருமானத்தை உயர்த்தி, வேலைவாய்ப்பை பெருக்கி சிறப்பான சாதனைகள் ஏதேனும் செய்துள்ளீர்களா? இதில் எதுவும் உண்மை இல்லாதபோது நாங்கள் ஏன் நீங்கள் சொல்வதை கேட்கவேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக இந்த நிலையில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா ட்விட்டரில் பிடிஆரிடம், “நீங்கள் வேலை செய்த ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்தும் நீங்கள் நீக்கப்பட்டதாக சொல்வது உண்மையா? சக பணியாளர்களிடம் நீங்கள் பழகும் விதம் சரியில்லாததால் நீக்கப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா? தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு நீங்கள் தள்ளியதாக கூறப்படுவது உண்மையா? அதிக கடனால் தமிழ்நாடு திவாலாகும் என்ற தகவல் உண்மையா?” என்று கேட்டிருந்தார்.
இந்த நிலையில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா ட்விட்டரில் பிடிஆரிடம், "நீங்கள் வேலை செய்த ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்தும் நீங்கள் நீக்கப்பட்டதாக சொல்வது உண்மையா? சக பணியாளர்களிடம் நீங்கள் பழகும் விதம் சரியில்லாததால் நீக்கப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா? தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு நீங்கள் தள்ளியதாக கூறப்படுவது உண்மையா? அதிக கடனால் தமிழ்நாடு திவாலாகும் என்ற தகவல் உண்மையா?" என்று கேட்டிருந்தார்.

பிடிஆர் பதில்
ட்விட்டரில் இதற்கு பதிலளித்த பழனிவேல் தியாகராஜன், "உங்கள் சக பணியாளர்களை முடக்கும்போது நான் தெரிவித்ததை மீண்டும் சொல்கிறேன். ரிசர்வ் வங்கி அறிக்கையை விடுங்கள். பெருக்கல் கணக்கு கூட தெரியாமல் பேசும் பெரியவர்களின் முட்டாள்தனத்தை கவனிப்பதற்காக ஒரு நானோ செகண்டை கூட வீணடிக்க மாட்டேன்." என்று பதிலளித்து இருக்கிறார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications