டென்சனான பிடிஆர்! தலையில் கை வைத்து.. மதவாதிகளுக்கு சாதாரண மூளை இல்லையாம்! பேக் ஐடிக்கு பதிலடி
சென்னை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மோசமான பணியால் அவர் வேலையை விட்டு அனுப்பப்பட்டதாக வீடியோவுடன் பதிவிட்ட பேக் ஐடிக்கு ட்விட்டரில் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாரதிய ஜனதா கட்சி, மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதன் காரணமாக பாஜகவினரும் பிடிஆரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிடிஆர் சென்ற கார் மீது மதுரை பாஜகவினர் காலணி வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி இலவசங்களுக்கு எதிராக பேசியதை விமர்சித்து பிடிஆர் பேசியது வைரலானது.

பிடிஆர் பேச்சு
இதனை தொடர்ந்து பாஜகவினர் கடந்த சில நாட்களாக பிடிஆர் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தொடுத்து வருகின்றனர். ஆனால், பழனிவேல் தியாகராஜன் பல்வேறு தொலைக்காட்சிகள், ஊடகங்களில் மத்திய அரசின் பொருளாதார திட்டங்கள், இலவசங்களுக்கு எதிரான பிரதமரின் பேச்சை விமர்சித்து வருகிறார்.

இலவசம் விவாதம்
இந்தியா டுடே விவாதத்தில், "எதன் அடிப்படையில் நீங்கள் சொல்வதை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள்? அரசியலமைப்பின் அடிப்படையிலா? நீங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளீர்களா? பொருளாதாரத்தில் பி.எச்.டி முடித்துள்ளீர்களா? நோபல் பரிசை வைத்திருக்கிறீர்களா? எங்களை விட சிறந்தவர்கள் என்று சொல்ல உங்களிடம் ஏதாவது இருக்கா? பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்று கடனை குறைத்து, வருமானத்தை உயர்த்தி, வேலைவாய்ப்பை பெருக்கி சிறப்பான சாதனைகள் ஏதேனும் செய்துள்ளீர்களா? இதில் எதுவும் உண்மை இல்லாதபோது நாங்கள் ஏன் நீங்கள் சொல்வதை கேட்கவேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக செய்தித் தொடர்பாளர்
இந்த நிலையில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா ட்விட்டரில் பிடிஆரிடம், "நீங்கள் வேலை செய்த ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்தும் நீங்கள் நீக்கப்பட்டதாக சொல்வது உண்மையா? சக பணியாளர்களிடம் நீங்கள் பழகும் விதம் சரியில்லாததால் நீக்கப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா? தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு நீங்கள் தள்ளியதாக கூறப்படுவது உண்மையா? அதிக கடனால் தமிழ்நாடு திவாலாகும் என்ற தகவல் உண்மையா?" என்று கேட்டிருந்தார்.

பேக் ஐடி
இதனை கண்ட பிடிஆர் சஞ்சு வர்மாவை கடுமையாக சாடி பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் ட்விட்டரில் ராமன் என்ற ஐடியில் ஒரு வெள்ளைக்கார நபர் பேசும் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மோசமான பணியால் அவர் வேலையை விட்டு அனுப்பப்பட்டதாக அவரது சக பணியாளர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிடிஆர் பதிலடி
இதுகுறித்து பதிலளித்து பிடிஆர், குறிப்பிட்ட ராமன் என்ற ஐடி இந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். "மதவாதிகளுக்கு சாதாரண மூளை இல்லை என்பது மீண்டும் நிரூபனமாகியுள்ளது. இந்த பேக் ஐடி சுயவிபரம், வீடற்ற ஒருவரை அழைத்து வந்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளது. அவருகு என் பெயர், வங்கியின் பெயர், எனது பணி எதுவும் தெரியாது. சரி. லைக், ரீட்வீட் செய்வதற்கு முன் முட்டாள்களை யார் என்று பார்க்கவும்." என்று பதிவிட்டுள்ளார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
பழனி கோவில் பஞ்சாமிர்தம் விலையை உயர்த்த முடிவு? விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications