"முடிஞ்சா தொட்டுப்பார்".. ஏன்? பயமா? இந்த தலைக்கனம் வேணாம்.. திமுக எம்பியை சீண்டிய பாஜக நாராயணன்
பாஜக நாராயணன் திருப்பதி, ட்வீட் போட்டு திமுக எம்பியை விமர்சித்துள்ளார்
சென்னை: பாஜக நாராயணனுக்கும், திமுக எம்பி செந்தில்குமாருக்கும் ட்விட்டர் போர் வலுத்து வந்த நிலையில், மீண்டும் சீண்டி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.
இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும், இதனை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, சுப்ரீம்கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் திமுகவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் எம்பி வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, "நீங்கள் மட்டும்தான் அறிவார்ந்த கட்சி என்று நினைக்கவேண்டாம். நாங்கள் பேசாமல் இருப்பதால் நீங்கள் சொல்வதை எல்லாம் அறியாமல் இருக்கிறோம் என்று மட்டும் நினைக்காதீர்கள்... நீங்கள் சொல்வதை நாங்கள் கவனிக்காமல் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள்" என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.

ஆமாம்.. சமூக நீதி
இதற்கு திமுக தரப்பில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.. நீதிமன்றத்தின் கருத்துக்கு பலரும் திரண்டு வந்து சோஷியல் மீடியாவில் நேற்று முதல் பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.. அந்தவகையில், திமுக எம்பி டாக்டர் செந்தில் குமாரும், தன் தரப்பில் ஒரு பதிலடியை தந்தார்.. அது தொடர்பாக ஒரு ட்வீட்டும் பதிவிட்டார்.. அதில், "ஆமாம்.. #சமூக_நீதி ஆட்சி மூலம் இதை சாதித்து, தரவுகள் மூலம் நிரூபித்து காட்டிய கட்சி திமுக மட்டுமே. இதில் என்ன doubt. My UnLords"..

"My UnLords"
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும்.. உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் முற்பட்ட வகுப்பை சேர்ந்த பிரிவினர்தான்.. அப்படி செய்தவரை இது போன்ற கமெண்ட்கள்தான் வரும். சமூக நீதிக்கும், மக்கள் நல்திட்டங்களுக்கும் எதிரான கருத்துக்கள்தான் வரும். இந்தியாவின் முதல் எஸ்.சி, ஓ.பி.சி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாட்டில் இருந்துதான் வந்தார்கள். அதற்கு கருணாநிதிதான் காரணம்" என்றும் செந்தில் குமார் குறிப்பிட்டார்.

Bring it on
இது தமிழக பாஜகவை மேலும் கொந்தளிக்க வைத்தது.. பாஜகவின் துணை பொதுச்செயலாளர் நாராயண் திருப்பதி இதற்கு பதிலடி தந்தார்.. "நீதிபதிகள் பற்றி கமெண்ட் செய்வது என்று மிகப்பெரிய குற்றம். இந்த எம்பி தண்டிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் பற்றி சாதீய ரீதியாக கருத்து சொல்லி இருக்கிறார். அவரின் இகழ்ச்சியான கருத்துக்களுக்கு தண்டிக்கப்பட வேண்டும்" என்று காட்டமாக பதிவிட்டார்.. உடனே இதற்கு, செந்தில்குமார் திருப்பி பதிலடி தந்தார். "போங்க.. Bring it on. .. முடிஞ்சா தொட்டு பார்(ங்க)" என்று சவால் விட்டு ட்வீட் போட்டிருந்தார்.. இப்படி இரு தரப்பு ட்வீட்களுக்குமே பாஜகவினரும், திமுகவினரும் திரண்டு வந்து மாறி மாறி கமெண்ட்களை பதிவிட்டும், ஒருவரையொருவர் சாடியும் வந்தனர்.

"முடிஞ்சா தொட்டுப்பாரு"
இந்நிலையில், எம்பி செந்தில்குமார் அந்த ட்வீட்களை எல்லாம் நீக்கிவிட்டதாக தெரிகிறது.. உடனே இதையும் ஒரு ட்வீட்டாக பதிவிட்டு, செந்தில்குமாரை சீண்டி கேள்வி எழுப்பி உள்ளார் நாராயணன்.. அதில், "'முடிஞ்சா தொட்டு பார்' என்று சவால் விட்டு விட்டு பதிவிட்ட ட்வீட்டை நீக்கி விட்டீர்களே? ஏன்? பயமா? சவாலில் தோற்று விட்டதாக ஒப்புக்கொள்கிறீர்களா? தலைக்கனம் தவிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் டாக்டர் செந்தில்குமார் அவர்களே!" என்று பதிவிட்டுள்ளார். இதற்கும் திமுகவினர் கிளம்பி வந்து நாராயணன் ட்வீட்டுக்கு பதில் தந்து கொண்டிருக்கிறார்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications