அறியாமை.. எல்லாம் "தப்பு".. புட்டு புட்டு வைத்த பிடிஆர்.. அண்ணாமலைக்கு டேட்டாவோடு பரபர பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தமிழக அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கைக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமாக பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் பென்சன் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசி இருந்தார். அப்போது, திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன் பழைய பென்சன் ஸ்கீம் கொண்டு வருவோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது நிதி அமைச்சர் பிடிஆர் பல்டி அடித்து புதிய பென்ஷன் ஸ்கீமில் தொடர்வோம் என்று கூறினார்.

பழைய பென்சன் ஸ்கீம் செட்டாகாது என்று அவர் கூறி உள்ளார்.

முறைகேடு

முறைகேடு

புதிய பென்ஷன் ஸ்கீம் வந்ததில் இருந்து அதில் கலெக்ட் செய்யப்பட்ட பணத்தை PFRDAவில் டெபாசிட் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு 10436 கோடி ரூபாயை அதில் டெபாசிட் செய்யவில்லை. இதை மறைக்கிறாங்க. இது மிகப்பெரிய குற்றம். இது மிக பெரிய தவறு, என்று அண்ணாமலை அந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இதில் பெரிய முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணாமலை தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.

பிடிஆர் பதில்

பிடிஆர் பதில்

இந்த நிலையில் அண்ணாமலையின் தமிழக அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கைக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமாக பதில் அளித்துள்ளார். அந்த அறிக்கையில், சமீபத்தில் அண்ணாமலை தமிழக அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. உண்மைக்குப் புறம்பானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.

முற்றிலும் தவறு

முற்றிலும் தவறு

அதன்பின் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரும் அனைத்துப் பணியாளர்களும் இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர். இத்திட்டத்தில் 6,02,377 பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இத்திட்டத்தின்படி, பணியாளர்களின் ஊதியத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகை பணியாளரின் பங்குத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்தொகைக்கு நிகரானத் தொகை அரசின் பங்களிப்பாக பணியாளர் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

இத்தொகைக்கு உரிய வட்டியை அரசு தொடர்ந்து செலுத்தி வருகிறது. இத்தொகையை 2003-ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) சேர்வதா, இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் வைப்புத்தொகை 31-03-2022 தேதியில் இத்தொகையில் ரூ.41,264.63 ரூ.53,555.75 கோடியாக உள்ளது. கோடி, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பணத்திரட்சியுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்திலும், ரூ.12,000 கோடி பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் ஒன்றிய அரசின் கருவூலப் பட்டியல்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு முதல் இந்த முறை தான் செயல்பாட்டில் உள்ளது. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இருந்த காலங்களிலும் இதை தான் பின்பற்றினார்கள்.

 இதுவரை பயன்படுத்தவில்லை

இதுவரை பயன்படுத்தவில்லை

இத்தொகையை தமிழ்நாடு ஓய்வூதியத்திற்காக மட்டுமே அரசு முற்றிலும் அரசு ஒதுக்கியுள்ளது, ஊழியர்களின் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர்களின் கணக்கில் அவர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்பு, வட்டித் தொகை அனைத்தும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, இதை வேறு எந்த பணிக்கோ, நோக்கத்திற்கோ இதுவரை பயன்படுத்தவில்லை. இனிவரும் காலங்களிலும் இந்நிதி ஓய்வூதியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எதையும் மறைக்காமல், ஒளிவுமறைவுமின்றி இத்தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே கொள்கை குறிப்பின் மாநில சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் மூலம் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வட்டி எவ்வளவு

ஆண்டு வட்டி எவ்வளவு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள மாதாந்திர கூட்டுத்தொகைக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் வட்டித் தொகை கணக்கிடப்படுகிறது. தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும். இவ்வட்டி தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. உண்மைநிலை இவ்வாறு இருக்க, அண்ணாமலையின் பேச்சு, அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளைப் பரப்பி திசை திருப்பும் நோக்கத்தில் அமைந்துள்ளது. இது, அவரின் அறியாமையையும், நிதிமேலாண்மை குறித்து தக்க விவரங்கள் இல்லாமல் பேசும் வழக்கத்தையே வெளிப்படுத்துகிறது., என்று பிடிஆர் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+