மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு?
சென்னை: கோட்டை வட்டாரத்திலும், அறிவாலயத்தின் உள்வட்டாரங்களிலும் இப்போது இதுதான் ஹாட் டாபிக். "மதுரைக்காரர் பி.டி.ஆர்., இனி மயிலாப்பூர்க்காரர் ஆக மாறப்போகிறாரா?" என்பதுதான் அந்த மில்லியன் டாலர் கேள்வி.

திமுகவின் 'மயிலாப்பூர்' மூவ்!
தற்போது மதுரை மத்திய தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் இருக்கும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை, வரும் தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் களமிறக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் சிறகடிக்கிறது.
ஏன் இந்த இடமாற்றம்?
மயிலாப்பூர் என்பது படித்தவர்கள், உயர் அடுக்கு வர்க்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கே பி.டி.ஆர் போன்ற 'கார்ப்பரேட் ஸ்டைல்' அரசியல்வாதி களம் இறங்கினால், அது ஆளும் தரப்பிற்குப் பெரிய பலமாக இருக்கும் என்பது அறிவாலயத்தின் கணக்கு. அதுமட்டுமில்லாமல், மதுரையில் உள்ள சில உள்ளூர் அரசியல் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இது ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது.
மதுரையில் ஏற்கனவே உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது. மதுரையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அதை சமாளிக்க வேண்டி தற்போது அவர் மதுரைக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
எதிர்க்கும் 'தாமரை' இசை!
இந்தச் செய்தி கசிந்த உடனே, கமலாலயமும் சுதாரித்துக்கொண்டதாக. பி.டி.ஆருக்குப் போட்டியாக, பா.ஜ.க தரப்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை இங்கே நிறுத்த ஆலோசனைகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
சமீபகாலமாகவே மயிலாப்பூர் பகுதியில் தமிழிசை காட்டும் ஆர்வம் தற்செயலானது அல்ல என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். "மயிலாப்பூரில் தமிழிசை போன்ற ஒரு வலுவான பெண் வேட்பாளரை நிறுத்தினால், அது பி.டி.ஆரின் பொருளாதார மேதமை இமேஜுக்குத் தகுந்த போட்டியாக இருக்கும்" என்பது பா.ஜ.க-வின் வியூகம்.
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை எவை
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் எது என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். பாஜகவுக்கு
மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகை
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
ராசிபுரம்
ராமநாதபுரம்
பத்மநாபபுரம்
மானாமதுரை
குளச்சல்
-ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை கோவை வடக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் பிராமணர்கள் அதிகம் உள்ள தொகுதி. இது ஒருவகையில் பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம் பிடிஆர் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர், கோவில் தரப்புடன் நெருக்கமானவர் என்பதால்.. அவருக்கும் இது சாதகமாக இருக்கும்.
கள நிலவரம் என்ன?
மயிலாப்பூர் முகம்: ஆன்மீகமும் நவீனமும் கலந்த தொகுதி. பி.டி.ஆரின் கம்பீரமான ஆங்கிலமும், தமிழிசையின் அதிரடியான பேச்சும் இங்கே மோதிக்கொண்டால் தேர்தல் களம் அனல் பறக்கும்.
சவால்: மதுரையில் தனது பரம்பரை செல்வாக்கை விட்டுவிட்டு சென்னைக்கு பி.டி.ஆர் வருவாரா? அல்லது தமிழிசைக்கு இது 'செட்' ஆகுமா? என்பதுதான் இப்போதைய சஸ்பென்ஸ்.
மொத்தத்தில், மயிலாப்பூர் தொகுதி இப்போது வி.ஐ.பி-க்களின் 'பேட்டில் கிரவுண்ட்' ஆக மாறத் தயாராகிவிட்டது. பொறுத்திருந்து பார்ப்போம், கபாலீஸ்வரர் அருள் யாருக்கு என்று!












Click it and Unblock the Notifications