கையில் 2 வாட்ச் கட்டி இருப்பது ஏன்?.. உருக்கமான காரணத்தை சொன்ன பிடிஆர்.. எதிர்பார்க்காத பின்னணி!
சென்னை: தனது கையில் இரண்டு வாட்ச் கட்டி இருப்பது ஏன் என்ற உருக்கமான காரணத்தை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொதுவாக கைகளில் இரண்டு வாட்ச் பயன்படுத்த கூடியவர். அதேபோல் இரண்டு லேப்டாப்களையும் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். அரசு தொடர்பாக பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொள்வதால் அவர் இரண்டு லேப்டாப்களை பயன்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட சென்னை விமான நிலையில் இவர் இரண்டு லேப்டாப் கொண்டு சென்றதால் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்காமல் இவரை தடுத்து நிறுத்த அது பிரச்சனை ஆனது. அதன்பின் அதிகாரிகள் இவரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

பேனா
இந்த நிலையில் கையில் இரண்டு வாட்ச் கட்டி இருப்பது ஏன் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கி உள்ளார். அதில், என் பாக்கெட்டில் 4 பேனா இருக்கும். பட்ஜெட் நேரத்தில் நான் நிறைய வேலைகளை பார்த்தேன். பட்ஜெட், வெள்ளை அறிக்கை, நிதி நிலை குறித்த பணிகளை செய்தேன். அப்போது ஒவ்வொரு முறையும் கோப்புகளை அடையாளம் காட்டிக்கொள்ளவும், வேறுபடுத்தவும் 4 கலர் பேனாக்களை வைத்து இருந்தேன். ஒவ்வொரு கோப்பிற்கும், தனி தனியாக கலர் பேனாக்களை பயன்படுத்தி இருந்தேன்.

மனைவி மாஸ்க்
என் மனைவிதான் என் மாஸ்கை உருவாக்குவது. நான் அவரை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி செய்யும்போது பார்த்தேன். அவர் மாஸ்டர் டிகிரி படித்துக்கொண்டு இருந்தார். அவர் ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பின்னர் பணியாற்றினார். பின்னர் நாங்கள் திருமணம் செய்த பின் வீட்டில் இருந்தபடி பல கைவினை பணிகளை கவனித்துக் கொள்கிறார்.

இரண்டு வாட்ச்
நான் இரண்டு வாட்ச் கட்டி இருக்கிறேன். ஒரு கையில் இருப்பது ஃபிட்பிட் வாட்ச். இது நமது இதயத்துடிப்பு, எவ்வளவு தூரம் நடக்கிறோம். எவ்வளவு படிகள் ஏறுகிறோம் என்பதை சொல்லும். இது படிப்படியாக முன்னேறி, இப்போது இருக்கும் ஆப்பிள் வாட்ச் மூலம் போன் பேசலாம். பாடல் கேட்கலாம், கேலண்டர், மெமோ எல்லாம் உள்ளது. இப்போது அதைத்தான் பயன்படுத்துகிறேன். அவசரமாக போன் பேச தேவைப்படும் போது இதை பயன்படுத்துவேன்.

ஃபிட்பிட் வாட்ச்
அதனால் அந்த ஃபிட்பிட் வாட்ச் எப்போதும் என்னுடன் இருக்கும். இந்த தொழில்நுட்பங்கள் அவசியமான விஷயம். இன்னொரு கையில் இருப்பதை வாட்ச் என்றே கூற முடியாது. என்னுடைய இடது கையில் கட்டி இருப்பது ரோலக்ஸ் வாட்ச். என் தாத்தாவுடைய வாட்ச். முப்பது வருடங்களுக்கு முன் என் தாத்தா பிடிஆர் என் அப்பாவிற்கு வாட்சை கொடுத்தார். அப்போது அந்த வாட்ச் ஓடவில்லை. நான் அமெரிக்கா சென்ற போது அதை என்னுடன் எடுத்து சென்றேன்.

ரோலக்ஸ் வாட்ச்
1989-90களில் நான் அமெரிக்கா எடுத்து சென்று சரி செய்து பயன்படுத்தி வருகிறேன். அப்போதில் இருந்து அந்த வாட்ச் என்னுடைய கைகளில் இருக்கிறது. 30 வருடமாக இதை கட்டிக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய வரலாறு, அடையாளம். அதனால் அதையும் என்னால் நீக்க முடியாது.எனவேதான் இரண்டையும் கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

காரணம்
எனக்கு அடையாளமே இதுதான். பலர் என்னிடம் கேட்கிறார்கள், ஏன் எப்போதும் திரும்ப திரும்ப அப்பா, தாத்தா பற்றி பேசுகிறார் என்று. எனக்கு அடையாளம் இதுதான். நான் வேறுநாடுகளுக்கு சென்று இருக்கிறேன். என் அப்பா, தாத்தா பெயர் தெரியாத நாடுகளில் படித்து, வேலை பார்த்து நான் பெரிய பதவிகளை வகித்து, நானாக சம்பாதித்து பணக்காரன் ஆகி இருக்கிறேன். பணமே கொடுக்காமல் தேர்தலில் வென்று இருக்கிறேன்.

பிடிஆர் பேட்டி
நான் என் குடும்பத்தை சொல்லித்தான் புகழ் தேட வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அவர்களுக்கான நன்றியை நான் மறக்க கூடாது என்பதால் அவர்களை பற்றி பேசுகிறேன். நான் ஏற்கனவே ஜெயித்துவிட்டேன். நான் என்னுடைய அடையாளத்தை மறக்காமல் இருக்கிறேன்., என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications