"ரெடி பண்ணுங்கம்மா".. பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவிற்கு ரகசிய கால்.. சிக்கும் தலை.. லீக்கான ஆடியோ!
சென்னை: சிறைத்துறை அதிகாரி ஒருவரிடம் பப்ஜி மதன் மனைவி கிருத்திகா பேசும் ஆடியோ ரெக்கார்ட் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
Recommended Video
யூ டியூபில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை விளையாடி அதன் மூலம் பல லட்சம் மோசடி செய்ததாக பப்ஜி மதனுக்கு எதிராக புகார் வைக்கப்பட்டுள்ளது. தன்னை எல்லாம் கைது செய்ய முடியாது என்று இவர் சவால்விட்டு வந்த நிலையில் போலீசார் இவரை கடந்த வருடம் கைது செய்தனர்.
யூ டியூப் சேனலில் வீடியோ பார்க்கும் பெண்களை லைவிலேயே மிக மோசமான கெட்ட வார்த்தைகளில் பேசி சர்ச்சையானர். அதோடு பள்ளி சிறுமிகளிடமும் இன்ஸ்ட்டா பக்கத்தில் பாலியல் ரீதியாக தவறாக பேசி இருக்கிறார்.

பப்ஜி மதன்
சில பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் புகார்கள் வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சிறுமிகளின் வீடியோக்களை இவர் டிக்டாக்கில் விற்பனை செய்து வந்ததாகவும் புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. இவர் மீது 150க்கும் மேற்பட்ட பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. பெண்களிடம் தவறாக பேசுதல், வீடியோ எடுத்து மிரட்டுதல், பண மோசடி, இளம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, டெலிகிராமில் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்வது என்று பல்வேறு புகார்கள் கேமர் மதன் மீது வைக்கப்பட்டுள்ளது.

பப்ஜி மதன் புகார்
இந்த வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது. தற்போது இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். மதனுக்கு உறுதுணையாக இருந்த அவரின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு தற்போது பெயிலில் வெளியே இருக்கிறார். மதனின் யூடியூப் சேனலில் கிருத்திகாதான் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது பப்ஜி மதன்
இந்த நிலையில் பப்ஜி மதனுக்கு சிறையில் கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க அவரின் மனைவி கிருத்திகா முயன்றதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. கிருத்திகா இது தொடர்பாக சிறை அதிகாரி ஒருவருக்கு போனில் பேசுவதாக ஆடியோவாக வெளியாகி உள்ளது. சிறைத்துறை அதிகாரியிடம் கிருத்திகா லஞ்சம் கொடுப்பது போல இதில் உரையாடல்கள் பதிவாகி உள்ளன.

கிருத்திகா
இதில் அந்த சிறைத்துறை அதிகாரி.. உங்கள் கணவர் நன்றாகத்தான் இருக்கிறார். பாதுகாப்பாக இருக்கிறார். கவலை வேண்டாம். 3 லட்சம் ரூபாய் கொடுங்கள். சீக்கிரம் பணத்தை ரெடி பண்ணுங்கமா. கூடுதல் வசதியை செய்து கொடுக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு கிருத்திகா, கண்டிப்பாக கொடுக்கிறேன் சார்.. கொஞ்சம் தொகையை குறைக்க முடியாதா. லாக்டவுன் கட்டுப்பாடுகளால் வருமானம் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

கிருத்திகா லஞ்சம்
லஞ்சம் கொடுப்பது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். இந்த ஆடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. ஆனால் கிருத்திகாவிடம் பேசும் அந்த சிறைத்துறை அதிகாரி யார் என்பது தெரியவில்லை. முதற்கட்டமாக கூகுள் பே மூலமாக ரூபாய் 25 ஆயிரத்தை கிருத்திகா அந்த சிறைத்துறை அதிகாரிக்கு அனுப்பிய தகவலும் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications