தங்கம் வாங்கியதற்கான ஆவணம் இருந்தால் தான் நகை கடன் என்ற விதிமுறைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக தங்க நகைக்கடன் வாங்குவோர், அந்த நகைக்கடனை அடைக்க வேண்டும் என்றால் முழு தொகையையும் கட்ட வேண்டும் என்று விதிமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்திருந்தது. இப்படி அடுத்தடுத்து தங்க நகைக்கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் நிபந்தனை சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது. மத்திய அரசு உடனே இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தங்கத்தின் விலை எந்த அளவிற்கு ஏறியதோ, அதே அளவு தங்க நகைக்கடன் வாங்குவதற்கான நிபந்தனைகளையும் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள நிபந்தனைகள், சாமானிய மக்கள் தங்க நகைகளை வைத்து கடன் வாங்கவே முடியாத அளவிற்கு உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஏழை எளிய மக்கள் தங்கத்தை வைத்து தான் கடன் வாங்கி தங்கள் வாழ்வில் சிக்கல்களை தீர்த்து வருகிறார்கள். இனி அவர்கள் தங்க நகைகளை வைத்தும் கடன் வாங்கவே முடியாத அளவிற்கு நிலைமையை ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏழை மக்கள் தவிப்பு
ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடனடி பணத்தேவைக்கு தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்தே பணத்தை பெறுவது இனிமேல் மிகப்பெரிய சிக்கலாக மாறும் என்கிறார்கள் பல பொதுமக்கள். தனியார் நடத்தும் அடகு கடைகளில் வட்டி அதிகம் என்றாலும் அடகு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், பெரும்பாலானவர்கள் வங்கிகளில் அடகு வைக்க இனி தயங்குவார்கள் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.
நகை மறு அடமானம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கட்டுப்பாடு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்க நகை கடன் வாங்கவே முடியாது என்கிற அளவிற்கு மாறியது. ஏனெனில் முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொள்ள முடியும்.
வட்டி மற்றும் அசல்
ஆனால் கடந்த ஆண்டு வெளியான விதிமுறைகளின் படி, தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பின்னர், இந்த முறை முற்றிலும் மாறியது. குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாடு அனைத்து தரப்பினரையும் பெருமளவு பாதித்திருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மக்கள் முழுமையாக மீள வழி தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
அதற்குள் அடுத்ததாக பேரிடியான ஒரு அறிவிப்பினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது.
நகையின் உரிமையாளர்
இதன்படி "தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும். தற்போது 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. இனி ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் தான் கடன் வழங்கப்படும். அதேபோல் தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும்.
ஒரு கிலோ வரை அடகு
தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும். தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம். ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும். தங்க நகை கடன் வழங்குபவர்கள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும்.
தினமும் 5000 ரூபாய்
தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை சேர்க்க வேண்டும். கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், 7 வேலை நாட்களுக்கு தங்கத்தை திருப்பி தர வேண்டும். தாமதம் ஏற்பட்டால், அதற்கு ஈடாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பு
இதில் தங்க நகை வாங்கியதற்கான ஆவணம் இருந்தால் தான் நகை கடன் என்ற விதிமுறைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த காலத்தில் நகை பட்டறைகளில் வாங்கிய நகைகளுக்கு ஆதாரம் இருக்காது. அதேபோல் பல வருடம் முன்பு வாங்கிய நகைகளுக்கும் பில் இருக்காது. அதேபோல் நகைகளுக்கு பில் வாங்கியவர்களும் பல ஆண்டுகள் பில்லை பாதுகாத்து வைப்பது இல்லை.. இப்படிப்பட்ட சூழலில் நகை வாங்கிய பில்லையும் சமர்பித்தால் மட்டுமே நகைக்கடன் என்ற விதிமுறை சாமானிய மக்கள் தங்க நகைக்கடன் தேடி வங்கிகளை நாடவே முடியாத நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications