பிப்.1 முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி.. ஆனால் ஒரு "கண்டிஷன்!"
சென்னை: பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் கொரோனா பரவல் அதிகரித்தது. ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட்டால் கொரோனா 3ஆவது அலை தீவிரமடைந்ததாக மருத்துவ நிபுணர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து தமிழகத்தில் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 4 இலக்கத்திலிருந்து 5 இலக்கமாக உயர்ந்தது. இதையடுத்து கடந்த 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

முழு ஊரடங்கு
இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, சினிமா தியேட்டர், கடற்கரைகள், துணிக் கடைகள், நகைக் கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு அறிவுறுத்தியது. அது போல் கடற்கரைகளுக்கு செல்ல ஜனவரி 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.

வெறிச் சோடி கிடந்த கடற்கரைகள்
பொதுவாக காணும் பொங்கலுக்கு மக்கள் கடற்கரைகளில் பொழுதை கழிக்க செல்வதுண்டு, ஆனால் அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் செல்ல முடியவில்லை. இதனால் கடற்கரைகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் நடைப்பயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

முழு ஊரடங்கும் ரத்து
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன.

மாஸ்க் அணிய அறிவுரை
இந்த நிலையில் சென்னையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடற்கரைகளில் கூட்டமாக கூடக் கூடாது, மாஸ்க் அணிந்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications