3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 3 மாநிலங்களில் மொத்தம் 296 தொகுதிகள் உள்ள நிலையில் சுமார் 1800க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பகல் 1 மணி வரை புதுச்சேரி- 56.83%, கேரளம்- 56.83%, அசாம்- 58.63% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீதம் வாக்குகள் பதிவானது. அசாமில் 84.42 சதவீதம் பதிவானது. கேரளாவில் 75.01 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. மாலை 6 மணி வரை பதிவான ஓட்டு சதவீதம் சற்று நேரத்தில் வெளியிடப்பட உள்ளது.

புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. கேரளாவில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ்- என்டிஏ மற்றும் காங்கிரஸ்- திமுக, அசாமில் பாஜக- காங்கிரஸ் இடையே பிரதான போட்டி இருக்கிறது. இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தல் முடிவுகளோடு எண்ணப்படும்.

Puducherry Election 2026  Puducherry  Assembly Election                                                       2026                                                                                 Other Tags

Apr 09, 2026, 7:49 pm IST

புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 83.4 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை கூடுதலாக ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
Apr 09, 2026, 6:45 pm IST

புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. கேரளாவில் 75.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அசாமில் 84.42 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
Apr 09, 2026, 6:05 pm IST

புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
Apr 09, 2026, 5:42 pm IST

புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
Apr 09, 2026, 4:33 pm IST

மாலை 3 மணி நிலவரப்படி கர்நாடகாவில் பாகல்கோட்டை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 54.82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. தாவணகெரே தெற்கு சட்டசபை தொகுதியில் 49.66 சதவீத வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நாகலாந்து கோரிடாங் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 75.06 சதவீதமும், திரிபுராவின் தர்மநகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 70.09 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
Apr 09, 2026, 3:55 pm IST

மதியம் 3 மணி நிலவரப்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 72.40% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதேபோல் கேரளாவில் 62.71%, , அசாமில் 75.91% ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
Apr 09, 2026, 3:44 pm IST

புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், காமராஜர் நகர் தொகுதி வேட்பாளருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனது மனைவியுடன் இணைந்து ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டளித்தார்.
Apr 09, 2026, 3:38 pm IST

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் வாக்குச்சாவடியில் லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனரும் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்
Apr 09, 2026, 3:14 pm IST

புதுச்சேரி உள்துறை அமைச்சரும் பாஜக வேட்பாளருமான நமச்சிவாயம், திருக்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
Apr 09, 2026, 2:47 pm IST

கேரளாவில் தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகிறார்கள். இதே டிரெண்ட் தொடர்ந்தால் மாலையில் 90% வாக்குகள் பதிவாகும். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மாலை 6 மணிக்கு முடிவடையும். மக்கள் திரளாக வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது- கேரளா மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கர்
Apr 09, 2026, 2:28 pm IST

3 மாநில சட்டசபை தேர்தல் 1 மணி வரை பதிவான வாக்குகள் விவரம்
Apr 09, 2026, 2:06 pm IST

சட்டசபை இடைத்தேர்தல் மதியம் 1 மணி வரை பதிவான வாக்குகள்:

தாவணகெரே தெற்கு (கர்நாடகா) - 37.17%

பாகல்கோட் (கர்நாடகா) - 43.75%

கோரிடாங் (நாகாலாந்து) - 59.52%

தர்மநகர் (திரிபுரா) - 52.76%

Apr 09, 2026, 1:50 pm IST

3 மாநில சட்டசபை தேர்தல் 1 மணி வரை பதிவான வாக்குகள் விவரம்

அசாம்- 58.63%

புதுச்சேரி- 49.70%

கேரளா-56.83%

Apr 09, 2026, 1:37 pm IST

புதுச்சேரியில் வாக்களிக்க வரும் பொதுமக்களை வரவேற்க தேர்தல் ஆணையம் ரோபோவை களமிறக்கியுள்ளது. இந்த ரோபோ பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கிறது.
Apr 09, 2026, 1:30 pm IST

புதுச்சேரியில் திருக்கனூர் வாக்குச்சாவடியில் பாஜக, காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர்கள் அதிகளவில் திரண்டிருந்ததாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டினர். இதில் மோதல் ஏற்பட்ட நிலையில், போலீஸ் இரு தரப்பினர் மீதும் தடியடி நடத்தினர்.
Apr 09, 2026, 12:59 pm IST

புதுச்சேரியில் திருக்கனூர் வாக்குச்சாவடியில் பாஜக, காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர்கள் அதிகளவில் திரண்டிருந்ததாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டினர். இதில் மோதல் ஏற்பட்ட நிலையில், போலீஸ் இரு தரப்பினர் மீதும் தடியடி நடத்தினர்.
Apr 09, 2026, 12:43 pm IST

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கேரளா சட்டசபை தேர்தலில் வாக்களித்தார். திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் அவர் தனது வாக்கைச் செலுத்தினார்.
Apr 09, 2026, 12:09 pm IST

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலத்தில் காலை 11 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியாகியுள்ளது.

காலை 11 மணி வரை பதிவான வாக்குகள்:

புதுச்சேரி- 37.06%

கேரளம்- 33.28%

அசாம்- 38.92%
Apr 09, 2026, 12:05 pm IST

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி சசி தரூர் திருவனந்தபுரத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
Apr 09, 2026, 11:43 am IST

கேரளா வாக்குப்பதிவு

மொத்த இடங்கள்: 140

பெரும்பான்மை வாக்குகள்: 71

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 2,71,42,952

ஆண்கள்: 4,43,595

பெண்கள்: 5,00,477

திருநங்கைகள்: 139
Apr 09, 2026, 11:17 am IST

கேரளாவில் சட்டசபை தேர்தலில் பிரபல நடிகர் மம்மூட்டி, தனது மனைவி சுல்ஃபத் குட்டியுடன் கொச்சியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.
Apr 09, 2026, 11:17 am IST

புதுச்சேரி தேர்தல்:

புதுச்சேரி தேர்தல்:
மொத்த இடங்கள்: 30 + 3 (நியமன எம்எல்ஏக்கள்)

பெரும்பான்மை எண்ணிக்கை: 16

கடந்த தேர்தல் முடிவுகள்:

என்ஆர் காங்கிரஸ்- 10

பாஜக- 6

திமுக- 6

சுயேச்சைகள்- 6

காங்கிரஸ்- 2
Apr 09, 2026, 11:14 am IST

புதுச்சேரி தேர்தல் வாக்குப்பதிவு:
Apr 09, 2026, 10:59 am IST

கேரளாவில் சட்டசபை தேர்தலில் பிரபல நடிகர் மம்மூட்டி, தனது மனைவி சுல்ஃபத் குட்டியுடன் கொச்சியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.
Apr 09, 2026, 10:35 am IST

புதுச்சேரி தேர்தல்:

புதுச்சேரி தேர்தல்:
மொத்த இடங்கள்: 30 + 3 (நியமன எம்எல்ஏக்கள்)

பெரும்பான்மை எண்ணிக்கை: 16

கடந்த தேர்தல் முடிவுகள்

என்ஆர் காங்கிரஸ்- 10

பாஜக- 6

திமுக- 6

சுயேச்சைகள்- 6

காங்கிரஸ்- 2

Apr 09, 2026, 10:27 am IST

புதுச்சேரி வாக்காளர் விவரம்:

மொத்த வாக்காளர்கள்- 9,44,211 (இறுதி வாக்காளர் பட்டியலின்படி)

ஆண்கள்: 4,43,595

பெண்கள்: 5,00,477

திருநங்கைகள்: 139
Apr 09, 2026, 10:09 am IST

புதுச்சேரி முதலமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, இரு சக்கர வாகனத்தில் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
Apr 09, 2026, 9:45 am IST

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலத்தில் காலை 9 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியாகியுள்ளது.

காலை 9 மணி வரை பதிவான வாக்குகள்:

புதுச்சேரி- 17.41%

கேரளம்- 16.23%

அசாம்- 17.87%

Apr 09, 2026, 9:31 am IST

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், தேவராவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
Apr 09, 2026, 9:10 am IST

புதுச்சேரியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் வி. நாராயணசாமி, "புதுச்சேரி மக்கள் INDIA கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என விரும்புகின்றனர். இங்கு எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+