புற்றுநோயை உண்டாக்கும் பஞ்சு மிட்டாய்! மெரினாவில் குவிந்த அதிகாரிகள்!
சென்னை: உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை மெரினா கடற்கரையில் விற்கப்பட்டு வரும் பஞ்சு மிட்டாய்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
நேற்று புதுச்சேரியில் நடத்தப்பட்ட சோதனையில் ஆரஞ்சு நிறத்தில் விற்கப் படும் பஞ்சு மிட்டாய்களில் நஞ்சு தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் கலந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே இன்று புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டிலும் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. உணவுப்பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் சென்னை மெரினா கடற்கரை மட்டும் பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனால் பஞ்சு மிட்டாய் குறித்து ஒரு அச்ச உணர்வு பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
மெரினாவில் ஆய்வை மேற்கொண்டுள்ள டாக்டர் சதீஷ்குமார், " நேற்று புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் நஞ்சு தன்மை கொண்ட வேதிப் பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அந்தச் செய்தி ஊடகம் மூலமாக அரசின் கவனத்திற்கு வந்தது.

ஆகவே, இன்று தமிழ்நாடு முழுவதும் சோதனையில் இறங்கி உள்ளோம். நிறையப் பஞ்சு மிட்டாய்களைப் பறிமுதல் செய்துள்ளோம். விரைவில் அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளோம்.
ஆய்வின் முடிவுக்குப் பின்னர் பஞ்சு மிட்டாயைத் தடை செய்வது குறித்து அரசு முடிவு எடுக்கும். அதுவரை பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்கு இந்த மாதிரியான பஞ்சு மிட்டாயையும் வாங்கி தர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சென்னையைப் பொறுத்தளவில் வடமாநில இளைஞர்களை இந்த மிட்டாய்களை விற்பனை செய்து வருகின்றன. பெரிய அளவில் இதற்காகத் தொழிற்சாலை இருப்பது போது தெரிய வில்லை. பல்லாவரம் பகுதியிலிருந்துதான் இதற்கான தயாரிப்பு பொருட்களைக் கொள்முதல் செய்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆகவே, பல்லாவரம் பகுதியிலும் சோதனை நடத்த உள்ளோம்" என்று கூறினார்.
இரண்டு தினங்கள் முன்னதாக புதுச்சேரியில் கிளம்பிய இந்தப் பஞ்சு மிட்டாய் புயல் இன்று தமிழ்நாட்டையும் தாக்கி உள்ளது. இது தொடர்பாகச் ஆய்வு செய்து முதன்முதலாக அறிவித்த புதுச்சேரி உணவுப் பாதுகாப்பு அதிகாரி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த ஆய்வில்தான் புற்றுநோயை உண்டாக்கும் நிறமி கலக்கப்பட்டுள்ளது உறுதியானது.
இது தொடர்பாக ஆய்வு செய்த புதுச்சேரி அதிகாரி, "புதுச்சேரியில் உள்ள பொழுது போக்கு இடங்களில் வடமாநிலத்து இளைஞர்கள் அதிக அளவில் பஞ்சு மிட்டாய்களை விற்பனை செய்து வருகின்றனர். அந்த மிட்டாய்களில் நிறம் கவர்ச்சியாக இருக்கும். அதனால், அது குழந்தைகளை அதிகம் கவர்ந்து இழுக்கும். ரோஸ் கலர் பார்க்கவே ஈர்ப்பாக இருக்கும்.

இந்த மாதிரியான பஞ்சு மிட்டாய்கள் பல காலமாக இங்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எங்களுக்கு சில காலமாகவே இந்த ரோஸ் கலர் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பஞ்சு மிட்டாய்களில் சந்தேகம் இருந்துவந்தது. உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ள நிறமிகள் அதில் கலக்கப்படுகின்றனவா? அல்லது தடை செய்யப்பட்ட நிறமிகள் கலக்கப்படுகின்றனவா? என்பதில் ஏற்பட்ட ஐயப்பாட்டைக் களைவதற்காக நடவடிக்கை எடுத்தோம்.
ஆகவே, அதைப் பற்றிய சோதனையில் இறங்கினோம். கோரிமேடு பகுதியில் ஒரு பஞ்சு மிட்டாய் விற்ற இளைஞரிடம் இருந்த மிட்டாய்களைப் பறிமுதல் செய்தோம். அதை உடனடியாக ஆய்வகத்திற்கு அனுப்பிச் சோதித்துப் பார்த்தோம்.

அந்தச் சோதனையில், Food Safety and Standards Authority of India யால் தடை செய்யப்பட்ட நிறமிகள் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்த நிறமி ஒரு விஷ நிறமி. அதைத்தான் அந்தப் பஞ்சு மிட்டாயில் நிறம் தூக்கலாகத் தெரிய வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதைச் சோதனை மூலம் கண்டுபிடித்தோம்.
இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், இந்த நிறமியானது புற்று நோயை உருவாக்கக் கூடியது.
கடைகளில் வாங்கும் ஊதுபத்திகளில் உள்ள குச்சிகளில் அடிப்பகுதியில் பச்சை வண்ணம், நீலம் வண்ணம் போன்ற நிறங்கள் கலந்திருக்கும். அந்த மாதிரியான நிறமிதான் இந்தப் பஞ்சுமிட்டாயிலும் கலக்கப்பட்டுள்ளது. அதை உணவுப்பொருட்களில் கலக்கவே கூடாது. அது மிகமிக கொடிய நஞ்சு. இதற்கு கலர் பொடிக்கு Rhodamine B என்று பெயர்.

இந்தப் பஞ்சு மிட்டாயைக் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பதால் உடனடியாக பாதிக்கப்படுவார்கள். மிக விரைவிலேயே அவர்களுக்குப் புற்று நோய்ப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
இதைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைக்கு முதலில் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். இதைத் தயாரித்து விற்பனை செய்து வரும் வடநாட்டு இளைஞர்கள் அறிந்தே இதைச் செய்யவில்லை. அவர்களுக்கு இந்த விஷம் இருப்பது தெரியாமல் செய்து விற்று வந்துள்ளனர். எங்களுக்கே கூட இந்த ஆய்வுக்குப் பின்பே புற்றுநோயை உண்டாக்கக்கூடிய விஷம் அதில் கலந்திருப்பது தெரியவந்தது" என்கிறார் இந்த புதுச்சேரி உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரி.

இனிமேல் சினிமாவில் கூட பஞ்சு மிட்டாய் சீலை கட்டி என்று யாரும் பாட முடியாது!




-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications