வில்லியனூர் காதலிக்கு வந்த வில்லங்கம்.. புதுச்சேரி ஃபர்னிச்சர் கடைக்காரரின் போனில்? ஆடிப்போன போலீஸ்
சென்னை: வில்லியனூரில் பெண்ணின் சடலம் குறித்த விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளியை சுற்றிவளைத்து பிடித்து விட்டார்கள்.. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பகீர் வாக்குமூலத்தையும் போலீசாரிடம் தந்துள்ளார்.. யார் இந்த பர்னிச்சர் கடை ஓனர்? புதுச்சேரியில் என்ன நடந்தது தமிழ்ச்செல்விக்கு?
புதுச்சேரி வில்லியனூர் வி.மணவெளி செந்தாமரை நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வி.. இவருக்கு 41 வயதாகிறது.. இவரது கணவர் பரத்வாஜ்.. இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்..

ஆனால், பரத்ராஜூடன் திருமணமான தமிழ்ச்செல்விக்கு நாளுக்கு நாள் கணவருடன் கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.. அதனால் கடந்த 2020ம் ஆண்டில் விவாகரத்து பெற்று கொண்டார்..
கணவர் மூலம் கிடைக்கும் ஜீவனாம்சத்தை வைத்து மகளுடன் வாழ்ந்து வருகிறார்.. தற்போது மகள் பிளஸ்1 படிக்கிறார்.. ஒதியம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் மகளை படிக்க வைத்து வருகிறார்.. தினமும் ஸ்கூலுக்கு மகளை, தமிழ்ச்செல்விதான் அழைத்து வருவாராம்.. மாலையிலும் பள்ளிக்கு சென்று மகளை அழைத்து வருவாராம்.
அக்கா மிஸ்ஸிங்
அப்படித்தான், கடந்த 5ம்தேதி மகளை பள்ளியில் விட்டு சென்றார். ஆனால் மாலையில் ஸ்கூலுக்கு தமிழ்ச்செல்வி மகளை கூப்பிட வரவில்லை. இதனால் பள்ளி நிர்வாகம் தரப்பில் தமிழ்செல்வியின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டுள்ளார்கள்.. அப்போது ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது..
உடனே தமிழ்செல்வியின் தம்பி மதன்ராஜ்க்கு பள்ளியிலிருந்து தகவல் சொல்லவும், அவர் பள்ளிக்கு வந்து அக்கா மகளை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.. ஆனால் வீட்டிலும் அக்காவை காணவில்லை.. எங்கு தேடியும் அக்கா இல்லை என்பதால், அதிர்ச்சியடைந்த மதன்ராஜூம், தமிழ்ச்செல்வு மகளும் வில்லியனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்கள்..
கடைசியாக பேசியது யார்
அக்காவை காணவில்லை என மதன்ராஜ் புகார் தரவும், அந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை துவங்கினர்.. அந்தவகையில், தமிழ்செல்வியின் செல்போன் நம்பர் ஆய்வு செய்யப்பட்டது.. அவர் யாருடன் கடைசியாக பேசினார்? யாரிடமிருந்து போன் வந்துள்ளது என்பதை கண்டறிந்தனர்..
அந்த நபர்களுக்கு போலீசார் போன் செய்து விசாரணை நடத்தினர். அனைவருமே போலீசாரின் அழைப்பை ஏற்று பதில் சொன்னார்கள்.. ஆனால் ஒருவர் மட்டும் போன் எடுக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபர் யார்? என்ற விசாரணையை துவங்கினர்.. அந்த நபர் பெயர் 45 வயது ஐயப்பன் என்பதும், ஒதியம்பட்டு, ரங்கசாமி நகரை சேர்ந்த பர்னிச்சர் கடை வைத்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
தமிழ்ச்செல்வி - ஐயப்பன்
இதையடுத்து ஐயப்பனை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.. எடுத்ததுமே தமிழ்செல்வியை கொன்றது நான்தான் என்று ஐயப்பன் ஒப்புக்கொண்டாராம்..
அதாவது தமிழ்ச்செல்வியை கோயிலில் முதன்முதலில் பார்த்தாராம் ஐயப்பன்.. அப்போது முதல் நட்பாக பேச ஆரம்பித்துள்ளனர்.. இது கள்ளக்காதலில் முடிந்துள்ளது.. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்..
ஒன்றரை லட்சம்
தன்னுடைய குடும்ப செலவுக்கு ஐயப்பனிடமிருந்து தமிழ்செல்வி பணம் வாங்கி வந்துள்ளார்.. அப்படித்தான் சமீபத்தில் ஒன்றரை லட்சம் வாங்கியிருந்தாராம் தமிழ்செல்வி,.. சம்பவத்தன்று மகளை பள்ளியில் விட்டுவிட்டு ஐயப்பனை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்..
அப்போது ஐயப்பன், தா கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.. இது கள்ளக்காதலர்களுக்கு இடையே வாக்குவாதமாக வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஐயப்பன், தமிழ்ச்செல்வியை கடுமையாக தாக்கி, கழுத்தையும் நெரித்து கொன்றுள்ளார்..
பாலித்தீன் சாக்கு மூட்டை
பிறகு சடலத்தை ஒரு பாலித்தீன் சாக்கு பையில் மூட்டையாக கட்டி, வில்லியனூர் கோர்க்காடு பகுதியிலுள்ள வாய்க்காலில் வீசிவிட்டாராம்.. இவ்வளவையும் வாக்குமூலமாக ஐயப்பன் சொல்லி உள்ளார்.
பிறகு தமிழ்ச்செல்வி சடலத்தை வீசிய கால்வாய் அருகே ஐயப்பனை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.. கடுமையான துர்நாற்றம் வீசியநிலையில், அந்த சாக்கு மூட்டையை போலீசார் கைப்பற்றி, அதிலிருந்து சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு தற்போது அனுப்பி வைத்துள்ளனர்... தொடர்ந்து ஐயப்பனிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications