சித்தப்பாவை முதல்வராக்க கோடிகளுடன் சோபா அனுப்புவாரே புஷ்பா... திடீரென தேடும் நெட்டிசன்கள்
சென்னை: புஷ்பா பாகம் 2 படத்தில் புஷ்பராஜாக வரும் அல்லு அர்ஜூன் மாஸ் ஹீரோவாக நடித்திருப்பார். தன்னுடன் இருக்கும் சித்தப்பா ராவ் ரமேஷை முதல்வராக்க பலருக்கும் கோடிகளை புதிய சோபாவில் வைத்து அல்லு அர்ஜூன் கொடுப்பார். அந்த படத்தில் மத்திய அமைச்சராக வரும் ஜெகபதி பாபு மற்றும் அவரது தம்பி ஆகிய இருவருக்குமே அடுத்தடுத்து புதிய ஷோபாக்களை அனுப்புவார்.
இதனை ஒப்பிட்டு முதல்வர் விஜய் அரசியலை சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் விஜய் போகும் முன்பு புதிய ஷோபா போனது ஏன் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அதிகாரத்தை கைக்கு வரவழைக்க பணம் தான் தேவை என்பதாக புஷ்பா 2 படம் இருக்கும். புஷ்பா 2 படத்தில் செம்மரக்கடத்தல் மன்னாக புஷ்பாராஜ் என்ற கேரக்டரில் அல்லு அர்ஜூன் நடித்திருப்பார். அதில் தன்னுடன் புகைப்படம் எடுக்க மறுத்த முதல்வரை பழிவாங்க விரும்புவார் அல்லு அர்ஜூன், அவரை மாற்றுவதற்காக அதிரடியான வேலைகளை செய்வார்..
அதன்படி தன்னுடன் இருக்கும் சித்தப்பா என்பவரை ஆந்திராவின் முதல்வராக்க விரும்புவார். அதற்காக எம்எல்ஏக்களுக்கு புதிய சோபாவில் பணம் அனுப்புவார்.

உச்சபட்சமாக மத்திய அமைச்சராக இருக்கும் ஜெகபதி பாபு மற்றும் அவரது தம்பிக்கும் பல கோடி பணம் அனுப்புவார்.. அப்போது ஜெகபதி பாபு (வீரபிரதாப் ரெட்டியாக நடித்திருப்பார்) , அல்லு அர்ஜுனிடம், பணத்தை கையில் தூக்கியபடி, சரி உனக்கு என்ன வேண்டும்.. சுரங்கம் டெண்டரா அல்லது என்ன டெண்டர் வேண்டும் என்று கேட்பார்.
அதற்கு அல்லு அர்ஜுன், எனக்கு மொத்த மாநிலமும் வேண்டும்.. என் சித்தப்பா முதல்வராக வேண்டும் என்பார். திருப்பதி லட்டு போல் பிரசாதமாக வாங்கி கொள்ளுங்கள்.. திரும்ப கேட்க மாட்டேன்.. மறுத்தால் என்னிடம் நிறைய ஷோபா இதேபோல் இருக்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று மிரட்டல் தொனியில் பேசுவார்..
இந்த சீனை விவரித்து தான் பலர் புஷ்பா பட பாணியில் முதல்வராகி உள்ளார் விஜய் என்று விமர்சிக்கிறார்கள். ஏனெனில் விசிக தலைவர் திருமாவளவன் அலுவலகம், சிவி சண்முகம் அலுவலகத்திற்கு அடுத்தடுத்து விஜய் வருவதற்கு முன்பு புதிய சோபா சென்றது. இதுதான் விமர்சனங்களுக்கு காரணமானது..
ஆனால் புஷ்பா 2 படத்தில் உள்ளது போல் உண்மையில் நடக்கவில்லை.. அந்த ஷோபாவில் பணம் அனுப்பப்படவில்லை. அப்புறம் ஏன் சோபா அனுப்பப்பட்டது..பொதுவாக கட்சி அலுவலகங்களில் சாதாரண சேர்களே இருக்கும். முதல்வரே வரும் போது, அவர் வரும் போது, மரியாதைக்காக அந்த கட்சி தலைவர்களே புதிய சோபாக்களை வாங்கி அங்கு வைத்துள்ளார்கள். 'இதுதான் உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது.
மற்றபடி புஷ்பா பட பாணியில் எல்லாம் செய்தால், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அடுத்த நொடி கண்டுபிடித்துவிடும். அதுமட்டுமல்ல.. பணம் கொடுக்கிறார்கள் என்றால் எந்த கட்சியும் இப்படி வெளிப்படையாக கொடுக்க மாட்டார்கள்.. வாங்கவும் மாட்டார்கள். அப்படி கொடுத்தாலும் சரி, வாங்கினாலும் சரி மாட்டிக் கொள்வார்கள்..
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் புஷ்பா பட பாணியில் சோபா போனது என்று விமர்சனத்தை முன்வைத்தார். அதன்பின்னரே பலரும் புஷ்பா படத்தில் சோபா சீனை தேடி பார்த்து வருகிறார்கள். அது நெட்பிளிக்ஸில் உள்ளது. யூடியூப்பில் தெலுங்கில் மட்டும் தான் உள்ளது. நெட்பிளிக்ஸில் மட்டுமே தமிழில் பார்க்க முடியும்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications