மொத்தமாக கிளம்பிய மக்கள்.. சென்னை பெருங்களத்தூர் ஸ்தம்பித்தது.. கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: காலாண்டு விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊர் செல்ல குவிந்த காரணத்தால் சென்னை பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் முதல் வண்டலூர் வரை ஒன்றரை கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
செப்டம்பர் 28ம் தேதி மிலாடி நபி, அதற்கு அடுத்தாக சனி மற்றும் ஞாயிறு, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருகிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் மெட்ரிகுலேசன்பள்ளிகளுக்கு கடந்த 24ம் தேதியில் இருந்தே விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு (புதன்கிழமை) புறப்பட்டனர். இதேபோல் ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பல ஆம்னி பேருந்துகள் முழு வீச்சில் இயங்கின.
சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி. நெல்லை என தமிழ்நாட்டின் 90 சதவீதம் ஊர்களின் மக்கள் சென்னையில் இருந்து அவர்களின் ஊருக்கு செல்ல பெருங்களத்தூர் வண்டலூர் செங்கல்பட்டு வழியாகவே செல்கிறார்கள்.
இந்த சூழலில் ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து பல்லாயிரம் பேர் ஒரே நேரத்தில் கார்கள், பேருந்துகள், பைக்குகள் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் கிளம்பினார்கள். சென்னையில் இருந்து எல்லா வாகனங்களும் பெருங்களத்தூரை தாண்டித்தான்3 போக வேண்டும் என்பதால், தாங்க முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது.
பெருங்களத்தூரின் தொடக்கம் வண்டலூர் வரை நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.ஒருபக்கம் பேருந்து நிறுத்தம் என்பதால் அரசு பேருந்துகள் அனைத்தும் ஒரு பாதையில் நின்றன.மறுபாதையில் தனியார் வாகனங்களும் சென்று முன்பாக போய் நின்று ஆட்களை ஏற்றிச்சென்றன. இது காரணங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதேநேரம் பெருங்களத்தூரில் நடைபெறும் மேம்பால பணியும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைந்தது.
சென்னை பெருங்களத்தூரில் ஒரே நேரத்தில் எல்லா வாகனங்கள் சந்திக்கும் நிலையில், அங்கு உள்ள சிக்னலும் நெரிசலை அதிகப்படுத்தியது. இதனால் பெருங்களத்தூர் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. இதேபோல் அதிகப்படியான வாகன நெருக்கம் காரணமாக பரனூர் சுங்கச்சாவடி பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications