மதுரையில் தொண்டரை குப்பை போல தூக்கி போட்ட பவுன்சர்கள்! வேடிக்கை பார்த்த விஜய்! இப்ப மட்டும் என்ன?
சென்னை: "சி.எம்.சார் என் மேல கை வையுங்கள், தொண்டர்களை எதுவும் செய்யாதீங்கன்னு" சொன்ன தவெக தலைவர் விஜய், மதுரையில் பவுன்சர்களால் தொண்டர் ஒருவர் குப்பை போல் தூக்கி வீசப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி "உங்கள் பவுன்சர்கள் செய்யும் அராஜகத்தையே கண்டுக்கொள்ளாத நீங்கள் அந்த மாதிரி டயலாக்கை எல்லாம் பேசாதீங்க" என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த கூட்டத்தில் ஒவ்வொருவராக மயங்கி விழுந்து இறந்தனர். ஒரு இடத்தில் 10 பேர் இறந்ததாக அங்கிருந்த நபர் ஒருவர் விஜய்க்கு சைகை மூலம் தெரிவிக்கிறார். ஆனால் அதை விஜய் பார்க்கவில்லை.

மக்கள் மயங்கி விழுந்த நிலையிலும் விஜய் தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கரூரில் தன்னை பார்க்க வந்த மக்களில் 41 பேர் இறந்த நிலையில் கரூர் மருத்துவமனைக்கு செல்லாமலும் தனது கட்சி நிர்வாகிகளை அங்கு அனுப்பாமலும் விஜய் சென்னைக்கு வந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியது.
3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ
இந்த நிலையில் 3 நாட்கள் கழித்து விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசுவது கூட யாருக்கும் கேட்காத அளவுக்கு இருந்தது. அந்த வீடியோவில் விஜய் தப்பித் தவறி கூட மன்னிப்பு, வருத்தம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.
சி.எம்.சார்
எனினும் அந்த வீடியோவில், "சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் ஒன்னு வீட்டிலோ அல்லது கட்சி அலுவலகத்திலோ இருப்பேன்" என விஜய் தெரிவித்துள்ளார்.
சினிமா டயலாக்
இது சினிமாவில் வில்லன்களிடம் ஹீரோ பேசும் டயலாக் போல் சினிமாட்டிக்காக இருக்கிறது. விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு மட்டுமில்லாமல் நன்கு வாட்ட சாட்டமாக பவுன்சர்களையும் வைத்துள்ளார். விஜய் எங்கு போனாலும் தொண்டர்களை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சில இடங்களில் ரசிகர்களிடம் அதிரடியும் காட்டி வருகிறார்கள்.
கொதித்த விஜய்
கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோரை கைது செய்ததற்கு விஜய், சி.எம். சார் என் மேல கை வைங்க, என் தொண்டர்கள் மீது வேண்டாம் என்கிறாரே, அன்று மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய் நடப்பதற்காக போடப்பட்ட ரேம்பில் ஒரு ரசிகர் அத்துமீறி ஏறிவிட்டார். அவர் மிஞ்சி போனால் விஜய்க்கு கைகுலுக்கிவிட்டு சென்று விட போகிறார்.
பவுன்சர்கள் செய்த அராஜகம்
ஆனால் அங்கிருந்த பவுன்சர்களோ அப்படியே அந்த ரசிகரின் சட்டையை தூக்கி குப்பை போல் கூட்டத்தின் மீது வீசினர். இதை பார்ப்பதற்கு பழைய கிராபிக்ஸ் படங்களில் அசுரன் கையில் சிக்கிய கொசுவை போல் தவெக தொண்டர் காட்சியளித்தார். இப்படி தூக்கி போட்டதில் அந்த ரசிகருக்கு ஏதாவது நடந்திருந்தால் அவருடைய குடும்பத்திற்கு யார் பதில் சொல்வது என்ற அறிவு அந்த பவுன்சர்களுக்கும் இல்லை. சரி விஜய்யாவது இந்த சம்பவத்தால் பதறி போய் பவுன்சர்களை கண்டித்தாரா என்றால் அதுவும் இல்லை, அவர் பாட்டுக்கு "நீங்கள் என்ன வேணாலும் செய்துகோங்க, என்கிட்ட எவனும் வந்துட கூடாது" என சென்று கொண்டிருக்கிறார். இந்த லட்சணத்தில் இவருக்கு டயலாக் வேற! என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
-
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா












Click it and Unblock the Notifications