சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்.. குடியரசுத் தலைவர் உத்தரவு!
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்காபூர்வாலா நாளை (மே 23ஆம் தேதி) தேதி ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, வரும் மே 24ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தொடர்பான பணிகளை ஆர்.மகாதேவன் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த 2023 ஏப்ரல் 19ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர், நீதிபதி கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே 28ஆம் தேதி தலைமை நீதிபதியாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய கங்காபூர்வாலா நாளை ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் பொறுப்பேற்க உள்ளார்.
கடந்த 1963ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் பிறந்த ஆர். மகாதேவன் 1989ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். சிவில், கிரிமினல் வழக்குகளில் அனுபவம் உள்ள நீதிபதி ஆர். மகாதேவன், மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞராகவும் பணியாற்றிய நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி மகாதேவன் பொறுப்பேற்க உள்ளார். மே 24-ம் தேதி முதல் நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications