முதல்முறையாக நாடார் சமூகத்தை சேர்ந்தவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக்கினோம்! ஆளுநர் ஏற்கவில்லை: ஆர்எஸ் பாரதி
சென்னை: நாடார் ஒருவர் டிஎன்பிஎஸ்சியின் தலைவராவதை ஆளுநர் ஏற்க மறுக்கிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழக காவல் துறை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு பணிக்காலம் கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தமிழகத்தின் டிஜிபியாக சங்கர் ஜிவால் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக டிஜிபியாக இருந்த நடராஜ் ஓய்வுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த வகையில் தற்போது காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது
அதன்படி தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவராக சைலேந்திர பாபு, 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களை பரிந்துரை செய்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. இந்த பட்டியல் அனுப்பி ஒரு மாத காலமாகியும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்பட்டது.
ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம் உள்ளிட்ட அனைத்து பரிந்துரைகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். இந்த நியமனங்கள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிவிட்டார்.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கருணாநிதி முதல்வராக இருந்த போது பிரதிநிதித்துவம் இல்லாத சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கினார். அதே நோக்கில்தான் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பியுள்ளார்.
1930ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. இதில் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இதுவரை தலைவராக இல்லையோ அதனை பார்த்து காவல் துறையில் நேர்மையாக பணியாற்றி ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவை பரிந்துரை செய்து அனுப்பினால் அதை ஆளுநர் ஏற்க மறுக்கிறார்.
கடந்த காலங்களில் டிஎன்பிஎஸ்சியில் பல தவறுகள் நடந்துள்ளன. அது நடக்கக் கூடாது என்பதற்காகவே சைலேந்திர பாபு போன்ற நேர்மையானவர்களை நியமிக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆளுநர் மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்து ஒரு மாதம் ஆகிவிட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுகவினரையே டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்தார். ஆனால் திமுக ஆட்சியில் அரசியலுக்கு அப்பாற்பட்டவரான சைலேந்திர பாபுவைதானே பரிந்துரை செய்துள்ளோம். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு போட்டியாக இன்னொரு அரசை நடத்தி வருகிறார். நாடார் சமூகத்தை சேர்ந்தவர் இதுவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக வரவில்லை. எனவே சமூகநீதி நோக்கத்தோடு சைலேந்திர பாபுவை முதல்வர் நியமித்துள்ளார். ஆனால் அதை ஆளுநர் ஏற்க மறுக்கிறார். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications