விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. கேழ்வரகு இனி ரேஷனில்! மத்திய அரசின் அறிவிப்பால் இனி கவலை இல்லை!
சென்னை: ரேஷன் கடைகள் மூலம் கேழ்வரகு விநியோகிக்கப்படுவதால், ஏழை எளிய குடும்பங்களுக்குக் குறைந்த விலையில் சத்தான உணவு கிடைப்பது சாத்தியமாகி வருகிறது.. முக்கியமாக, குழந்தைகளுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் இதன் மூலம் எளிதாக சென்றடைகிறது.. இப்படிப்பட்ட சூழலில், கேழ்வரகு கொள்முதல் குறித்து மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.. அது என்ன தெரியுமா?
தற்போதைய சூழலில், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு மக்களிடையே வெகுவாக அதிகரித்து வருகிறது.

கேழ்வரகு - ரேஷன் கடைகள்
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, ராணுவ வீரர்களின் உணவுப் பட்டியலிலும் சிறுதானியங்களை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ராணுவ வீரர்களுக்கான உணவில் சிறுதானியங்களை, மத்திய அரசு சேர்த்துள்ளது. அதேபோல், தமிழக அரசும் ரேஷன் கடைகள் வழியாக மக்களுக்குக் கேழ்வரகு வழங்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் கடந்த 3 வருடங்களில் மட்டும் 3,578 விவசாயிகளிடமிருந்து 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் தெரிவித்திருந்தார்..
உணவுத்துறை அமைச்சர்
இது சம்பந்தமாக ஒரு விளக்கமும் தந்திருந்தார்.. அதில், "2022-2023 பருவத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெறும் 514 மெட்ரிக் டன்னுடன் தொடங்கிய இத்திட்டம், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு கடந்த ஆண்டில் 4,050 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது.
நடப்பு 2025-2026 கொள்முதல் பருவத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 6,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்தது. இதற்காக நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டை விட மெட்ரிக் டன்னிற்கு ரூ. 5,960 உயர்த்தி, ஒரு மெட்ரிக் டன் ரூ. 48,860 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த விலையேற்றத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய வேண்டும்" என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்..
தமிழக விவசாயிகள் - விளைச்சல்
ஆனால், தமிழக விவசாயிகளிடம் இருந்து, கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கான அவகாசம் இந்த மாதம் முடிவடைகிறது.. இந்த கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் வரை, மத்திய அரசு நீட்டித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
தமிழக விவசாயிகளிடம் இருந்து, 2025 நவம்பர் 1ல் துவங்கி, இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நடப்பு பருவத்தில், 6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, தமிழக அரசு வாணிப கழகத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு தந்த குட்நியூஸ்
இதற்காக விவசாயிகளுக்கு, ஒரு டன் கேழ்வரகுக்கு, 48,860 ரூபாயை, குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்குகிறது. கேழ்வரகு விளைச்சல் அதிகம் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில், நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்கி, விவசாயிகளிடம் இருந்து, வாணிப கழகம் கேழ்வரகை கொள்முதல் செய்கிறது. நடப்பு பருவத்தில் இதுவரை, 965 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கான அவகாசம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு, வாணிப கழகம் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று, கேழ்வரகு கொள்முதலுக்கான அவகாசம், வரும் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அறுவடை தாமதமான விவசாயிகளும் அவசரமின்றி தங்கள் விளைச்சலை அரசு மையங்களில் ஒப்படைத்து முழுமையான பலனை அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது... மேலும் இதில் புரோக்கர்கள் தலையீடும் இருக்காது... பணமும் நேரடியாக விவசாயிகளின் கைக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications