"எல்லாம் அந்த 16-ல் தான் இருக்கு!" - நாடாளுமன்றத்தில் புதிர் போட்ட ராகுல் காந்தி.. என்ன அர்த்தம் தெரியுமா!
டெல்லி: நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. அப்போது பேசிய ராகுல் காந்தி மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார். மேலும், கடைசியாகப் பேசும்போது அவர், "எல்லாம் அந்த 16-ல தான் இருக்கிறது" என்று சொல்லி புதிர் போட்டார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்,
மத்திய அரசு இப்போது நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா தொடர்பாக விவாதம் நடந்து வரும் சூழலில், பல்வேறு எம்பிக்களும் இது தொடர்பாகப் பேசி வருகிறார்கள். நேற்றைய தினம் பிரதமர் மோடி இந்த மசோதா தொடர்பாகப் பேசிய நிலையில், இன்று எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தி
அப்போது ராகுல் காந்தி பல முக்கிய கருத்துகளைக் கூறினார். லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் உரையை நேற்று கவனித்ததாகத் தெரிவித்தார். அவர் மேலும், "நேற்று பிரதமர் பேசும்போது அவரிடம் எந்த ஒரு வேகமும் இல்லை, மிகவும் உடைந்து போயிருந்தார். எதையும் அவரால் கடத்த முடியவில்லை. அப்போது தான் எனது போனில் தேதியைப் பார்த்தேன், அது ஏப்ரல் 16. அப்போதுதான் எனக்குப் புரிந்தது, எல்லாம் அந்த எண் 16ல் தான் இருக்கிறது!"
நம்பர் 16
குறிப்பாக, "இந்த மர்மத்திற்கான பதில் அந்த 16ல் தான் ஒளிந்திருக்கிறது!" நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீசிய நம்பர் 16 புதிர் இப்போது ஒட்டுமொத்த தேசத்தையும் யோசிக்க வைத்துள்ளது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட நேரத்தை விமர்சித்த ராகுல், ஏப்ரல் 16ம் தேதியைக் குறிப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்த '16' எதைக் குறிக்கிறது என்பது குறித்து அவையில் இருந்தவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ராகுல் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. "உங்களுக்கு விடை தெரிந்தால் எக்ஸ் தளத்தில் பதிவிடுங்கள், மிக விரைவில் உங்களுக்கே உண்மை புரியும்" என்று சஸ்பென்ஸ் வைத்தார். ராகுலின் இந்தப் பேச்சுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
அது என்ன புதிர்
சிலரோ, இது ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் டிடிபி கட்சியின் 16 எம்பிக்களைக் குறிக்கிறது என்கின்றனர். மற்றவர்களோ, செல்வாக்கு மிக்கவர்களுக்குத் தொடர்புடைய ஏதோ ஒரு சர்வதேச ஊழல் அல்லது 16 நிமிட வீடியோ ஆதாரத்தைக் குறிக்கலாம் என விவாதிக்கின்றனர். ராகுல் காந்தி இது தொடர்பாக, "இந்த மசோதாவைக் கொண்டு வந்தது ஒரு தவறு என்பது பிரதமருக்கே தெரிந்துவிட்டது, அந்தப் பதற்றம் தான் அவரிடம் தெரிந்தது" என விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை 'அரசியல் பணமதிப்பிழப்பு' என விமர்சித்து வரும் சூழலில், ராகுல் காந்தி கையில் எடுத்துள்ள இந்த 'நம்பர் 16' அஸ்திரம் பேசுபொருளாக மாறியுள்ளது..
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளும்போது நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 840ஆக உயரும். அதில் 3ல் ஒரு பங்கு இடங்களை மகளிருக்கு ஒதுக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டமாக இருக்கிறது. இருப்பினும், மகளிர் ஒதுக்கீடு தனி அதை தொகுதி மறுசீரமைப்பு உடன் தொடர்புப் படுத்தக்கூடாது என்பதே பாஜகவின் வாதமாக உள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications