அண்மைக் காலமாக நடப்பதெல்லாம் வேற வெலல்.. தமிழக மக்களை வெகுவாக கவரும் ராகுல் காந்தி!
சென்னை: அண்மைக் காலமாக தமிழகத்தில் ராகுல் காந்தி செய்வது எல்லாம் வேற லெவலில் உள்ளது. இயல்பாக, எளிமையாக பழகும் அவருடைய குணம் பலருக்கும் பிடித்துப்போய் உள்ளது. வில்வேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சி நடத்தும் யூடியூப் குழுவினருடன் அவர் கலந்துரையாடி சமையல் செய்து சாப்பிட்டது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
Recommended Video

பொங்கல் பண்டிகை அன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை ராகுல் காந்தி பார்த்தார். அதன் பின்னர் மக்களோடு மக்களாக உணவு சாப்பிட்டார். அப்போது பக்கத்து இலையையும் பார்த்து, அவுங்களுக்கும் சாப்பாடு வைங்க என்று சொன்னார். அத்துடன் பள்ளி மாணவியிடம் படிப்பு குறித்தும் அக்கறையுடன் விசாரித்தார். பாட்டிமார்களுடன் போட்டோ எடுத்தார். இதை பற்றி பேச்சுக்கள் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையின் போது வெகுவாக பேசப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல.. டீக் கடைகளிலும், சலூன் கடைகளிலும், சாமானியர்களும் ராகுல் வருகையை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடினார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஆனால் உண்மையில் அவரின் எளிமையான அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றிதான் அது.

தமிழக மக்கள்
இதனிடையே தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், 'தமிழ் வணக்கம்' என்ற பெயரில் நேரடிப் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அண்மையில் தொடங்கினார். ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியில் பேசும் போது, டெல்லியில் ஆட்சி நடத்துபவர்கள் தமிழ் கலாசாரத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் மரியாதை செலுத்துவதில்லை. தமிழில் பேசுவதால், தமிழ் மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்" என்று கூறினார்.

அன்பு மரியாதை தெரியும்
"தமிழ் மக்களுடனான என்னுடைய பிணைப்பு பற்றி உங்களுக்கு தெரியும். எனது குடும்பத்தினருக்கு நீங்கள் காட்டிய அன்பும் மரியாதையும் பற்றி எனக்கு நன்றாக தெரியும். நான் உங்களில் ஒருவன். உங்களுக்கு எதையும் சொல்ல நான் இங்கு வரவில்லை, உங்களை சந்தித்து பிரச்சனைகளை தெரிந்துகொள்ளவே வந்துள்ளேன்." என்றும் ராகுல் காந்தி கூறினார். அத்துடன் மக்களுடன் மக்களாய் அமர்ந்து மீண்டும் உணவு சாப்பிட்டு அங்கிருந்தவரகளை அக்கறையுடன் விசாரித்தார். அத்துடன் தன்னிடம் செல்பி எடுக்க வந்த சிறுமியின் கனநிமிடத்தில் உடையை சரிசெய்து செல்பி எடுத்துக்கொண்டார். இதேபோல் தன்னை சந்திக்க வந்தபாட்டியைநிறுத்தி சந்தித்துவிட்டு சென்றார். இப்படிப்பட்ட அணுகுமுறைகளால் ராகுல் காந்தி தான் கடந்த இரண்டு வாரங்களாய் பேசுபொருளாய் மாறினார்.

சமையல் நிகழ்ச்சி
இந்த சூழலில் நேற்று வில்வேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சி நடத்தும் யூடியூப் குழுவினரை சந்தித்தார். அந்த குழுவிரை திடீரென சர்ப்ரைஸாக சென்று சந்தித்த ராகுல் காந்தி, அவர்களுடன் சேர்ந்து காளான் பிரியாணி சமைத்தார். அதை அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். அந்த யூடியூப் குழுவினரை ஊக்கப்படுத்திய ராகுல் காந்தி, தமிழில் ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி சமைத்தது, பேசியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளம் மொத்தமும் ராகுல் காந்தி தான் பேசுபொருளாக உள்ளார்.

மக்களிடம் வரவேற்பு
ராகுல் காந்தி அந்த யூடியூப் குழுவினரிடம், நான் உங்களது யூடியூப் வீடியோக்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். முதலிலேயே இங்கு வந்து இதைஎல்லாம் செய்ய விரும்பினேன். எனக்கு நேரம் கிடைக்கவில்லை. இப்போது வந்துள்ளேன். உங்களோடு இணைந்து கொள்ளலாமா என்று ஆசையுடன் கேட்டார். அதனால் நெகிழ்ந்து போன அவர்கள். தாரளமாக வாருங்கள் என்று உற்சாகம் அடைந்தனர். ராகுலின் எளிமையான அணுகுமுறையும், மக்களோடு மக்களாய் இருக்கும் அவரது செயலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications