கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்வார்களா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், இரு தலைவர்களும் இணைந்து பிரச்சாரம் செய்வார்கள் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டாலும், இதுவரை நடந்த நிகழ்வுகளில் அவர்கள் ஒரே மேடையில் தோன்றாதது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது தொடர்பாக திமுக இன்னும் தெளிவான முடிவை எடுக்காதது குறிப்பிடத்தக்கது.
2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் முக்கிய கட்சியாக அதுவும் தேசிய கட்சியாக காங்கிரஸ் அங்கம் வகித்து வருகிறது. இந்த நிலையில், இரண்டு கட்சிகளின் முக்கிய தலைவர்களான முக ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வது கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் உள்ளது.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர் சமீபத்தில் அளித்த தகவலில், ராகுல் காந்தி மற்றும் மு.க. ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் கூட்டணி வேட்பாளர்களிடையே ஒருவித நம்பிக்கை உருவானது.
2026 சட்டசபை தேர்தல்
ஆனால்கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் - திமுக கூட்டணியில் நடந்த சில நிகழ்வுகள் இருவரும் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்வார்களா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அண்டை மாநிலமான புதுச்சேரி பகுதியில் இருவரும் ஒரே நாளில் தனித்தனியாக பிரச்சாரம் செய்திருந்தாலும், நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்தியா கூட்டணி
மேலும் இந்தியா கூட்டணிக்குள் இவ்விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்யும் தேதியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ராகுல் பிரச்சாரம் இன்னும் உறுதியான தகவல் வெளியாகாததால், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஒருவித பதற்றம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் வருகை
இந்த சூழ்நிலையில், ராகுல் காந்தியின் வருகை தாமதமாகும் நிலையில், மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக தரப்பில் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி, வாக்காளர்களை நேரடியாக கவரும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மு.க. ஸ்டாலின் - ராகுல் காந்தி
கடந்த 2024 மக்களவை தேர்தலில் மு.க. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு தங்கள் உறுதியான நட்பை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த நிலையில், இந்த சட்டசபை தேர்தலிலும் அவர்கள் ஒரே மேடையில் தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
கூட்டணி பிரச்சாரம்
இரு கட்சிகளும் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வந்தாலும், ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்வார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வரும் நாட்களில் இதுகுறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகுமா? என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
-
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications