Railway: உங்க ரயில் டிக்கெட்டில் மற்றவர்கள் பயணிக்கலாம்.. எப்படி தெரியுமா? இதை செய்தால் போதும்!
சென்னை: ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளில் பயணிகள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றினால், டிக்கெட்டில் உள்ள பெயரை மாற்றி வேறு ஒருவர் பயணிக்க முடியும். ஆனால், இதில் சில நிபந்தனைகள் உள்ளன. இப்படி பெயர் மாற்றம் செய்வது என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ரயில்களில் டிக்கெட் கிடைக்கவே கடும் பாடுபட வேண்டியுள்ளது. குறிப்பாக கடைசி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு அதிலும் தட்கலில் டிக்கெட் கிடைத்தால் ஏதோ அதிர்ஷ்டம் என்று சொல்லும் அளவிற்குதான் தற்போது நிலமை உள்ளது.

பெயரை மாற்றுவது எப்படி?
இப்படி கஷ்டப்பட்டு ரயில் டிக்கெட் எடுத்தால், அந்த டிக்கெட்டில், பெயர் உள்ள பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதே நேரத்தில் ரிஷர்வேஷன் டிக்கெட்டில் டிக்கெட் எடுக்கும் போது கொடுத்த பயணிகளின் பெயரை மாற்ற முடியும். இதன் மூலம் வேறு நபர்கள் பயணிக்க முடியும். ஆனால் சில நிபந்தனைகளின் கீழ் இந்த பெயர் மாற்றம் அனுமதிக்கப்படுகிறது. அது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே, அருகிலுள்ள ரயில்வே முன்பதிவு அலுவலகத்தை அணுகி பெயர் மாற்றம் கோரலாம். இதற்காக மின்னணு முன்பதிவு சீட்டின் பிரிண்ட் அவுட் மற்றும் செல்லுபடியாகும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தேவைப்படும்.
யாருக்கெல்லாம் மாற்ற முடியும்?
சம்பந்தப்பட்ட பிரிவின் மூத்த கோட்ட வர்த்தக மேலாளர் அல்லது முக்கிய நிலையங்களில் உள்ள தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர் இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்க அதிகாரம் பெற்ற அதிகாரி ஆவார்.
குடும்ப உறுப்பினர்களுக்குள் டிக்கெட்டை மாற்ற முடியும். அதாவது முன்பின் தெரியாதவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நண்பர்களுக்கு டிக்கெட்டை மாற்ற முடியாது. பயணிகள் 24 மணி நேரத்திற்கு முன்பே எழுத்துப்பூர்வ கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அவரது பெயரில் உள்ள முன்பதிவை தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவி போன்றவர்களுக்கு மாற்றலாம்.
24 மணி நேரத்திற்கு முன்
அரசு ஊழியர்கள் பணி நிமித்தமாகப் பயணம் செய்யும்போது, தகுதியான அதிகாரியின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின்கீழ், புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகப் பெயர் மாற்றம் அனுமதிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் குழுவாகப் பயணித்தால், நிறுவனத் தலைவர் 48 மணிநேரத்திற்கு முன் விண்ணப்பித்து, ஓர் மாணவரின் முன்பதிவை அதே நிறுவனத்தின் வேறொருவருக்கு மாற்ற முடியும்.
திருமணத்திற்கு குழுவாக செல்கிறீர்கள் என்றால், 48 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பித்து, ஒரு உறுப்பினரின் முன்பதிவை மற்றொருவருக்கு மாற்றலாம். தேசிய மாணவர் படை (NCC) குழுக்களுக்கு, குழுத் தலைவர் குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன் பெயர் மாற்றத்தைக் கோரலாம். இத்தகைய கோரிக்கைகள் ஒருமுறை மட்டுமே ஏற்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சலுகை டிக்கெட்டுகளுக்கு கிடையாது
மேலும், குழு முன்பதிவுகளில், மொத்த குழு உறுப்பினர்களில் 10%க்கும் அதிகமான பெயர் மாற்றங்கள் அனுமதிக்கப்படாது. சலுகை டிக்கெட்டுகளுக்கு பெயர் மாற்றம் வழங்கப்பட மாட்டாது என்பதும் கவனித்தக்கது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பயணிகள் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து வைத்து இருப்பதை பார்க்க முடியும்.
ஆனால், கடைசி நேரத்தில் அலுவலகத்தில் லீவ் கிடைக்காமல் போவது அல்லது வேறு பணிகள் காரணமாக டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் போது, தங்கள் வீட்டில் உள்ள யாரேனும் பயணிக்க விரும்பினால் பெயர் மாற்றம் செய்து அவர்கள் பயணிக்க முடியும் என்பதால் இந்த வசதி பயணிகளுக்கு பயனுள்ள ஒன்றாக அமைந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications