மதுரை டூ தாம்பரத்திற்கு ஸ்பெஷல் ரயில்.. பயணிகளுக்கு நிம்மதி கொடுத்த ரயில்வே.. விறுவிறு புக்கிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு இந்த ரயில் நாளை இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொடங்கிய நிலையில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு வந்து செல்கிறார்கள். அதிலும் விடுமுறை தினங்களில் சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். இதனால், ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

Train Chennai Madurai

ரயில்களில் பயணிகள் முன் கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து வைத்து விடுவார்கள். இதனால் கடைசி நேரத்தில் ஊருக்கு செல்ல திட்டமிடுபவர்களுக்கு டிக்கெட் கிடைக்காத நிலையே இருக்கும். பேருந்துடன் ஒப்பிடும் போது ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயில்களில் பயணம் செய்யவே விரும்புவார்கள். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வேறு வழியின்றி பேருந்துகளை நாடி செல்ல வேண்டியுள்ளது.

ஆனால் தற்போது பயணிகளின் சிரமத்தை குறைக்கும் விதமாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் நாளை மதுரையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் (06184) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு வந்து சேரும்.

திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், வழியாக புதன் கிழமை காலை 6.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடகியுள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்ய ரூ.440 கட்டணம் ஆகும்.

மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணமாக ரூ.1,180-ம், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் டிக்கெட் விலை ரூ.1,635 என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியில் டிக்கெட் விலை ரூ.414-ம், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் 1,100-ம், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் 1490 -ம் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் இன்று சென்னைக்கு திரும்பி வருகிறார்கள்.

இதனால், திருச்சி - தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளிலும் டிக்கெட் புக்கிங்க் ஆகிவிட்டது. டிக்கெட் கிடைக்காத பயணிகள், பயணத்தை தள்ளி வைத்து இருப்பார்கள். அத்தகைய பயணிகளுக்கு பயனளிக்கும் விதமாக நாளை இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+