சூப்பர்! ரயில்களில் வரப்போகும் செம மாற்றம்! இந்தியன் ரயில்வேயின் LHB பிளான்! பார்த்தா அசந்துடுவீங்க
சென்னை: ரயில் பிரயாணங்களை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பயணிக்கும் நம் அனைவருக்கும் ரயில்வே துறையின் போதாமைகள் ஏமாற்றத்தைத்தான் கொடுக்கும்.
ஆனால் பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது எல்எச்பி ரயில் பெட்டிகளை அனைத்து ரயில்களிலும் இணைக்க தொடங்கியுள்ளது இந்தியன் ரயில்வே. அப்படி என்ன உள்ளது இந்த பெட்டிகளில்? என்பதைத்தான் இந்த செய்தி விளக்குகிறது.

ரயில்
இந்த பெட்டிகள் ஜெர்மனியின் Linke Hofmann Busch நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதால் எல்எச்பி என்றே பரவலாக அழைக்கப்படுகிறது. கடந்த 2000ம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இருந்து வரும் இந்த பெட்டிகள் சாதாப்தி ரயில்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வசதியை அனைத்து வகை ரயில்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து ரயில்களிலும் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளுக்கு இனி எல்எச்பி பெட்டிகளையே பயன்படுத்தலாம் என ரயில்வேத்துறை யோசித்து வருகிறது.

Linke Hofmann Busch
இவை ஜெர்மனியின் வடிவமைப்பை கொண்டிருந்தாலும் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்படுகிறது. இந்த பெட்டிகள் 160-200 கி.மீ வேகம் சென்றாலும் எந்த விதத்திலும் பாதிப்படையாதவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான இதர பெட்டிகளை காட்டிலும் இது அதிக இடவசதி கொண்டதாகும். இது சிறப்பு பெட்டி என்பதால் இதில் 24 பேர் வரை மட்டுமே பயணிக்க முடியும்.

பெட்டிகள்
ரயில் தடம் புரண்டால் கூட இந்த பெட்டிகள் கவிழாது என்பதுதான் இதன் சிறப்பம்சம். ஏனெனில் இது துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளன. எனவே இது ஒன்றோடு ஒன்று மோதி நசுங்காது. மேலும் இந்த பெட்டிகள் எவ்வளவு வேகம் சென்றாலும் அந்த வேகத்தை திறமையாக கையாள இதில் நியூமேடிக் டிஸ்க் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின்போது சாதாரண பெட்டிகள் வெளியேற்றும் ஒலியைவிட இந்த பெட்டிகள் 60 சதவிகிதம் அளவிற்கே ஒலியை ஏற்படுத்தும். இதனால் பயணிப்பவர்களுக்கு எந்த வித இரைச்சலும் தொந்தரவாக இருக்காது.

பெட்டிகள் கவிழாது
இது மட்டும்தானா? என்றால் கிடையாது. பயணிப்பவர்கள் குளிப்பதற்கு ஷவர், ஷீட்டர், அமர்ந்து சாப்பிட வசதியாக சேர், ஸ்பீக்கர் வசதி, புத்தகம் படிக்க வசதி என பல அம்சங்களை இந்த பெட்டி கொண்டிருக்கிறது. எனவே இதனை தயாரிப்பதற்கான செலவும் அதிகம். ஒரு பெட்டி தயாரிக்க தோராயமாக ரூ.1.5-2 கோடி வரை செலவாகிறது. தற்போது இவை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் இடம்பெற்றிருக்கிறது.
இந்நிலையில் விரைவில் இந்த பெட்டிகளை அனைத்து ரயில்களிலும் இணைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications