ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் யாருங்க இது? இரவெல்லாம் அந்த கயிறை பிடித்து? ஆடிப்போன சென்னை டூ பாலக்காடு
சென்னை: ரயில் பயணிகளின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், ரயில்வே நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. எனினும், செயல்பாட்டிலுள்ள பல்வேறு ரயில்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராமல் உள்ளதாகவும், அது தொடர்பான புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் புகார்கள் கிளம்பி வருகின்றன. தற்போதுகூட, முதியவர் ஒருவர் சென்னை டூ கேரளாவுக்கு பயணித்தபோது, தன்னுடைய மோசமான பயண அனுபவத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
சமீப காலமாகவே, ரயில்களில் போதுமான வசதியின்மை, பாதுகாப்பு குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன.. இதனால், அதிருப்திக்குள்ளாகும் ரயில் பயணிகள், ரயில்களின் மோசமான நிலையை தாங்களே அதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்..

அடிப்படை வசதிகள்
குறிப்பாக, கூட்ட நெரிசல் மற்றும் டிக்கெட் இல்லாத பயணிகள் கூட இருக்கைகளை ஆக்கிரமிப்பது போன்றவை ரயில் பயணத்தை மோசமாக்கி வருகின்றன.. இந்திய ரயிலில் உள்ள கழிவறையின் நிலைமையையும் வீடியோவாக வெளியிட்டு வருவது, பொதுமக்களிடம் பெருத்த அதிர்ச்சியை, கவலையை உண்டுபண்ணி வருகின்றன.
அதிலும் வெகுதூரம் பயணிக்கும் பயணிகளுக்குதான் இதுபோன்ற தொல்லைகள் அதிகமாகின்றன.. இவர்களால் இடவசதி, சுகாதார வசதியில்லாமல் தொலைதூர பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ள முடிவதில்லை..
மணப்பெண்ணின் துயர நிலைமை
சமீபத்தில்கூட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியிருந்தது. மணமக்களுடன் திருமண கோஷ்டி ஒன்று ரயிலில் ஏறியிருக்கிறது. அந்த ரயிலில் உட்காருவதற்கு சீட் இல்லாததால், தரையில் அதுவும் கழிவறை அருகே ஒரு மணப்பெண் உட்கார்ந்து பயணம் செய்திருக்கிறார்.. தன்னை யாரும் கழிவறை அருகில் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக, சேலையில் முகம், தலையை போர்த்தியவாறு, அந்த பெண் உட்கார்ந்திருந்தார்..
இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுவிட்டனர்.. கல்யாண பெண் கழிவறை அருகே தரையில் உட்கார்ந்திருப்பதை கண்டு, இணையவாசிகள் கொந்தளித்து விட்டனர்.. இது மிகப்பெரிய விவாதத்தையும் அப்போது கிளப்பியிருந்தது.
நொந்துபோய் எடுத்த வீடியோ
இந்நிலையில், மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.. அதாவது சென்னையிலிருந்து பழனி வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதியவர் நாகேஸ்வரன், தன்னுடைய மனைவியுடன் ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டியில் ரிசர்வ் செய்திருந்தார். அதன்படி அந்த ரயிலில் பழனிக்கு பயணம் செய்துள்ளார்... அப்போதுதான், தாங்கள் பயணித்த பெட்டியை தாங்கக்கூடிய இரும்பு கம்பி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இரவு முழுக்க பயணம் செய்ய வேண்டுமே? என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து நின்றுள்ளார்.. பிறகு, படுக்கைக்கு முன்பு அதாவது இரும்பு கம்பிக்கு பதிலாக கயிற்றினை கட்டிவிட்டார்.. அத்துடன், இரவு முழுவதும் அந்த கயிற்றை பிடித்து கொண்டே மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார்.
அதிருப்தி அடைந்த பயணி
இந்த நிலைமை வேறு எந்த பயணிக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், தன்னுடைய நிலைமையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும், இதை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். அத்துடன், ரயில்வே நிர்வாகத்திற்கும் பலமுறை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருக்கிறார்.. இந்த புகாருடன் நேரிலும் சென்றுள்ளார்.. ஆனால், இப்போது வரை அந்த ஸ்லீப்பர் பெட்டியில் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்று முதியவர் நாகேஸ்வரன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications