தண்டவாளத்தில் அத்துமீறினால் இனி அவ்வளவுதான்.. ஓடவோ, ஒளியவோ முடியாது.. ரயிலில் வருது 3-வது கண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் தண்டவாளங்களில் சமீப காலமாக ரயில்களை கவிழ்க்கும் முயற்சியும், சட்ட விரோத செயல்களும் அதிரித்து வரும் சூழலில், இதுபோன்ற அசம்பாவித நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு செக் வைக்கும் விதமாக ரயில்களில் ஏஐ கேமராக்கள் பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயிலின் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டில் என ரயில் செல்லும் பாதையை சுற்றிலும் கவர் செய்யும் வகையில் இந்த கேமராக்கள் வைக்கப்பட இருக்கிறதாம்.

நாட்டில் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்கை கொண்டது ரயில்வே. பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்திய ரயில்வேயில் பணியாற்றுகிறார்கள். தொலை தூர பயணங்கள் முதல் மின்சர ரயில்கள் வரை என தினமும் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

train ai camera southern railway

ரயில் பயணம்: இந்த ரயில்களில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். மலிவான கட்டணம், பாதுகாப்பான பயணம், டாய்லட் வசதி போன்றவை இருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் பயணம் செய்பவர்கள் ரயிலில் செல்லவே விரும்புகிறார்கள். பெரிதாக பயணக்களைப்பு எதுவும் இன்றி பயணிக்க முடியும் என்பதால் பயணிகள் பலருக்கும் ஃபேவரைட் ஆக ரயில் பயணமே உள்ளது.

ரயில் விபத்துக்கள்: ஆனால், சமீப காலமாக ரயில்கள் அடிக்கடி தடம் புரண்டு விபத்துக்குள்ளாவது, ரயில் தண்டவாளங்களில் ரயிலை கவிழ்க்க நடைபெறும் சில முயற்சிகளும் பயணிகள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ்-பிவானி காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயில், கான்பூரின் முதேரி கிராமத்தின் கிராசிங் அருகே வந்த போது, தண்டவாளத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்​​ கிடப்பதை லோகோ பைலட் பார்த்தார்.

தெற்கு ரயில்வே நடவடிக்கை: இதையடுத்து அவசரமாக ரயிலை நிறுத்தினார். இதனால், மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டுவிட்டது.. பயணிகளுக்கும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபோன்ற அடிக்கடி அச்சமூட்டும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில்தான், இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்றை ரயில்வே நிர்வாகம் கையில் எடுத்து இருக்கிறது.

ஏஐ கேமரா: இதன்படி, ரயில்களில் ஏஐ வசதியுடன் கூடிய கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ரயிலின் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டில் என ரயில் செல்லும் பாதையை சுற்றிலும் கவர் செய்யும் வகையில் இந்த கேமராக்கள் வைக்கப்பட இருக்கிறதாம். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "ரயில் தண்டவாளங்கள் மற்றும் ரயிலை சுற்றியுள்ள இடங்களை கண்காணிக்க கேமரா பொருத்தப்படும்.

3 மாதங்களில் டெண்டர்: பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக இந்த வசதி செய்யப்பட உள்ளது. ரயிலின் என்ஜின், கார்டு பெட்டியில் கேமராக்கள் பொருத்தப்படும். கேமராக்கள் பொருத்துவதற்கான டெண்டர் இன்னும் மூன்று மாதங்களில் வெளியிடப்படும். அனைத்து ரயில்களிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். கேமரா பொருத்துவது மட்டுமின்றி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யவும் சேமித்து வைக்கவும் தரவு மையம் ஒன்றும் உருவாக்கப்படும்.

15,000 கோடி செலவில்: சமீபத்தில் ரயில்களை கவிழ்க்க நடைபெற்ற முயற்சிகள் மிகவும் தீவிரமானவை. எனவே, ரயில்வே டிராக்குகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்த மாநில போலீசாருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார். ரூ.15 ஆயிரம் கோடி செலவில் சுமார் 75 லட்சம் ஏஐ கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் ரயில்வே டிராக்குகளில் சந்தேகத்திற்கடமான பொருட்கள் இருந்தால் உடனடியாக லோகோ பைலட்களை அலர்ட் செய்யும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+