ரெஸ்ட் எடுக்காத மேகங்கள்.. இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும்
சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நகர்ந்து உள்ள நிலையில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும். இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எந்தெந்த மாவட்டங்கள்?
திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளன.

சென்னை
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளையும் மழை
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

4 நாட்கள்
15 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16 ஆம் தேதியும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அதிகபட்ச மழை
கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழி (மயிலாடுதுறை) 44, கொள்ளிடம் (மயிலாடுதுறை) 32, சிதம்பரம் (கடலூர்) 31, அண்ணாமலை நகர் (கடலூர்) 28, சிதம்பரம் AWS (கடலூர்) 27, புவனகிரி (கடலூர்) 21, காட்டு மன்னார் கோயில் (கடலூர்) தலா 19, தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 18, மயிலாடுதுறை, மணல்மேடு (மயிலாடுதுறை), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 16 மழை அளவு பதிவானது.

பரவலாக மழை
காங்கேயம் (திருப்பூர்) 15, பொன்னமராவதி (புதுக்கோட்டை), வெள்ளகோவில் (திருப்பூர்), லால்பேட்டை (கடலூர்) தலா 13, மிலம்பட்டி (கரூர்), அரவக்குறிச்சி (கரூர்) தலா 12, உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கரையூர் (புதுக்கோட்டை) 11, வேடசந்தூர் (திண்டுக்கல் ), காரைக்கால், திருப்பூர் தலா 11, விருதாச்சலம் (கடலூர்) ,வானுர் (விழுப்புரம்), பரமத்திவேலூர் (நாமக்கல்) , செய்யூர் (செங்கல்பட்டு), பண்ருட்டி (கடலூர்) தலா 10.












Click it and Unblock the Notifications