வானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை
Recommended Video
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு, விட்டு பெய்து வரும் மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து, வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, செவ்வாய்ப்பேட்டை, அயோத்தியாபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்தால், விவசாய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல், மதுரை, திண்டுக்கல், நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் மக்களுக்கு தற்போது, பெய்து வரும் மழை ஆறுதலை கொடுத்துள்ளது. மழைநீரை, குடங்களில் சேகரித்து வைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications