அடுத்த 3 மணி நேரத்தில்.. இந்த 16 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உட்பட தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் செய்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain will occur in 16 districts in next 3 houres: CMD Alert

நாளை முதல் 12ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலையில், அதாவது அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, மதுரை, கோவை உட்பட இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அலெர்ட் செய்துள்ளது.

16 மாவட்டங்கள்: ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மாலை 4 மணி வரை தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+