சென்னை, காஞ்சிபுரம் உட்பட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் 4 செ.மீ.மழை மழை பதிவாகி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கொல்லிடம் ஆனைக்காரன் சத்திரம் ஆகிய பகுதிகளில் 4 சென்டி மீட்டர் மழை மழை பதிவாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசில் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications