மழைநீர் வடிகால்கள் பணி: கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
மழைநீர் வடிகால்கள் அமைப்பது, தூர்வாருவது என்ற பெயரில் மக்கள் பணம் தவறாக பயன்படுத்துவது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கில் முறையான தகவல் எதுவும் இல்லை என்பதால் ஏற்கமுடியாது என வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

பொதுநல வழக்கு
சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைப்பது, தூர் வாருதல் என்ற பெயரில் மக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

கட்டுப்படுத்தப்படாத டெங்கு
அவர் தாக்கல் செய்த மனுவில், "டெங்குவை கட்டுப்படுத்த கோரி 2019 ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்த போது, அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக மாநகராட்சி உறுதியளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் தற்போது டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் 139 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில், 2021 ஜனவரி முதல் நவம்பர் வரை 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்.

ரூ. 7000 கோடி செலவில் 980 கி.மீ வடிகால் பணி
சாலையோரங்களில் கழிவுகள் அப்புறப்படுத்தவில்லை, கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் நகரில் 500 க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளம் தேங்கியது. முந்தைய ஆட்சியில் 7000 கோடி ரூபாய் செலவில் 980 கி.மீ நீளம் கழிவுநீர் வடிகால் அமைத்ததாக கூறிய நிலையில், முதல்வர் இல்லம் அமைந்துள்ள சாலை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் தேங்கியதுடன், பல நாட்கள் வெள்ளம் வடியவில்லை.

சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்
மழைநீர் வடிகால்கள் அமைப்பது, தூர்வாருதல் என்ற பெயரில் மக்கள் பணம் தவறாக பயன்படுத்துவது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

முறையான தகவல்கள் இல்லாத மனு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜா மற்றும் பரத் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்ந்தவர் அரசுக்கு இதுகுறித்து மனு அளித்ததாக எந்த தகவலும் இல்லை. உண்மையில் பொது நலனில் அக்கறை இருந்திருந்தால், முறையாக அரசுக்கு விரிவான மனு அளித்திருக்க வேண்டும். அப்போது அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்கும் என்று மனுதரருக்கு அறிவுறுத்தினர்.
மனுதாரரின் விண்ணப்பத்தில் எந்த இடத்தில் டெங்கு அதிகம் உள்ளது, எந்த தேதியில் வெள்ள நீர் தேங்கியது போன்ற எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை என்பதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications