உயிர் தப்பிய முன்னாள் ஆளுநர்.. நாங்க யாரு தெரியுமா? கொடூர தாக்குதலை பெருமையாக சொல்லும் அதிமுக வாரிசு
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தாக்கிப்பேசக் கூடாது என்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கும் நிலையில் திமுகவை வெள்ளைக்கொடி வேந்தர் என்று விமர்சித்துள்ளார் அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன். அத்துடன் முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதலையும் அவர் நினைவுகூர்ந்து உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு கொடுத்த உரை குறிப்பில் இடம்பெற்ற பெரியார், தமிழ்நாடு, திராவிட மாடல், அம்பேத்கர், அண்ணா போன்ற வார்த்தைகளையும் முக்கியமான பத்திகளையும் படிக்காமல் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் உரையை சட்டசபை குறிப்பில் இருந்து நீக்கி தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து வெளியேறினார்.

திமுகவினர் விமர்சனம்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கையை கண்டித்து சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை திமுகவினர் மற்று கூட்டணி கட்சிகள் முன்வைத்து வருகிறார்கள். குறிப்பாக திமுக மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் ரவியை விமர்சித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு எதிராக போஸ்டர்கள் அடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

ராஜ் சத்யன் கண்டனம்
இதுகுறித்து அதிமுக ஐடி விங் செயலாளரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவின் மகனுமான ராஜ் சத்யன் ட்விட்டரில் விமர்சனம் செய்து இருக்கிறார். அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "வெள்ளை கொடி வேந்தர்கள், உங்க தைரிய நாடகமெல்லாம் 24 மணி நேரம்தானா?? அதை மடை மாற்ற 13-16 துணிவு - வாரிசு அதிகாலை show cancel, பேனர் கட் அவுட்'ஸ் கூடாது.. ஆனால் 11-12 தேதி அதிகாலை உண்டு... என்ன ஒரு ஏமாற்று வேலை..? அதிமுக கவர்னர் எதிர்ப்பு இணைக்கப்பட்டு உள்ளது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி
அத்துடன் 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதல் தொடர்பான நாளிதழ் செய்தியை ராஜ் சத்யன் பகிர்ந்து இருக்கிறார். அப்போது சென்னா ரெட்டிக்கும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக ஜெயலலிதா குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவினர் தாக்குதல்
மாநில அரசின் அதிகாரத்தில் சென்னா ரெட்டி தலையிடுவதாக குற்றம்சாட்டினார் ஜெயலலிதா. ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்துகளையும் புறக்கணித்தார் ஜெயலலிதா. ஒருமுறை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னா ரெட்டியை வழிமறித்து அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் தாக்கியதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. சென்னா ரெட்டி உயிர் தப்பினார் என்ற தலைப்புடன் அப்போது வெளியான தினகரன் நாளிதழின் படத்தை ராஜ் சத்யன் பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications