தஞ்சை பெரிய கோயிலுக்கு வெளியே இருக்கும் ராஜராஜ சோழன் சிலை.. உள்ளே வைப்பதை எது தடுக்கிறது! வைரமுத்து
சென்னை: ராஜராஜ சோழனின் சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, ராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என பேசியிருந்தார். தற்போது அதனை கவிதை வடிவில் தனது எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அதேபோல, ராஜராஜ சோழன் மன்னராக முடிசூட்டியதும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில்தான். பிறந்த நாளையும், முடிசூடிய நாளையும் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக இந்த விழா நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு ராஜராஜன் விருது, தேவார நாயகம் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என பேசியிருந்தார். இந்த நிலையில், விழாவில் பேசியதை கவிதை வடிவில் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வைரமுத்து கூறியதாவது:-

மாமன்னன் ராசராசனின் 1039ஆம் சதயப் பெருவிழா தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் நிகழ்ந்தது. பங்குபெற்றேன். தமிழர்களின் கலைச்சின்னம் இது என்ற வரலாற்றுப் பரவசமும் வாள் வினையால் அகண்ட தமிழகம் கண்ட பேரரசனின் பேரன் என்ற பெருமிதமும் என்னைப் பேசவைத்தன. ஆலயம் எழுப்பிய அரசர்க்கரசனின் சிலை ஆலயத்துக்கு அகத்தே இல்லாமல் புறத்தே நிறுவப்பட்டிருப்பது கண்டு தமிழ் இதயங்களில் குருதி கசிகிறது, அறச் சீற்றத்தோடு பேசினேன்:
"ஆலய வளாகத்திற்குள்ளே இறை உருவங்களைத் தவிர மனிதப் படிமங்கள் திகழக் கூடாது என்று ஆகமவிதிகள் அறிவிப்பதாய் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கருதலாம். அதற்கொரு மறுப்பை அறிவிக்கிறேன். தேவாரப் பதிகங்களை மீட்டெடுத்த தமிழ் மாமன்னன் தேவார மூவராகிய அப்பர் - சம்பந்தர் - சுந்தரரின் செப்புத் திருமேனிகளை ஆலத்தியத்தினுள்ளே எழுப்பி வழிபடச் செய்தான்.

அந்த மனிதப் படிமங்களை எழுப்ப எந்த ஆகமவிதி இடம் தந்ததோ, அதே ஆகமவிதி ராசராசப் பெருமன்னனின் திருச்சிலையை ஆலய வளாகத்துக்குள் அமைக்க இடந்தராதா என்ற கேள்வியை முன்வைக்கிறேன். ஆழ்ந்து நோக்குமா ஆவன செய்யுமா ஒன்றிய அரசின் தொல்லியல் துறை?" என்று பேசினேன்.
தக்கவர்க்கு ராசராசன் விருது வழங்கினோம், தவத்திரு பொன்னம்பல அடிகளார், மாவட்டர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், பாபாஜி ராஜா போன்ஸ்லே, தலைவர் செல்வம், தஞ்சை செழியன், பாம்பே ஸ்வீட்ஸ் மணி முதலியோர் உடனுள்ளனர். என்று பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications