55 வயதுல 17வது குழந்தையை பெற்ற ரேகா.. அங்க தான் ட்விஸ்ட்.. ராஜஸ்தான் டாக்டர்களுக்கே ஒன்னும் புரியல
சென்னை: மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் பெருகுவது, பொருளாதாரத்துக்கு ஆபத்தாகிவிடுகிறது. இதை உணர்ந்துதான் உலக அளவில் பிறப்பு விகிதத்தைக் குறைக்க தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.. 'நாம் இருவர், நமக்கு இருவர்', 'ஒன்று பெற்றால் ஒளிமயம்... அதிகம் பெற்றால் அல்லல் மயம்' என்றெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதையடுத்து, நம்முடைய நாட்டில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைக்கப்பட்டது... அதிலும் தென் மாநிலங்களில் எடுக்கப்பட்ட தீவிர முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது.. ஆனால், வடமாநிலங்களில் அத்தனை தீவிரம் காட்டப்படவில்லை என்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், ராஜஸ்தானின் நடந்துள்ள சம்பவம் பலருக்கும் வியப்பை தந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நம்முடைய வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஒரு விநோத சம்பவம் நடந்தது.. மேல்ஆலாங்குப்பத்தில் பிரசாந்த் - அமுதா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.. இவர்கள் 2 பேருமே கூலித்தொழிலாளிகள்,.

இவர்களுக்கு ஏற்கனவே 7 குழந்தைகள் பிறந்தன.. இதில், 2 குழந்தைகள் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டன.. இப்போது 5 குழந்தைகளும் நலமாக உள்ளனர்..
தெறித்தோடிய அமுதா
இந்நிலையில் அமுதா 8வது முறையாக கர்ப்பமானார். எனவே, நிறைமாதம் காரணமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.. 8வது பிரசவம் என்று தெரிந்ததுமே அங்கிருந்த டாக்டர்கள், பிரசவம் முடிந்ததுமே, குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்..
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அமுதா, பிரசவம் நடப்பதற்கு முன்பே, மருத்துவமனையிலிருந்து வெளியேறி சென்றுவிட்டார்.. பிரசவ வார்டில் அமுதாவை காணாமல் பதறிப்போன டாக்டர்கள், மருத்துவமனை முழுக்க தேடினார்கள்.. பிறகு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக அமுதாவின் வீட்டுக்கு விரைந்து சென்றார்கள்... சமூகத்தின் பொருளாதார நிலை குறித்தும், குடும்ப சூழல் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனிமேல் தங்கள் குடும்பத்திற்கு தேவையானவைகளை கருத்தில் கொண்டு குடும்ப கட்டுப்பாட்டில் பங்கெடுக்க வேண்டும் என்று அந்த தம்பதியருக்கு அதிகாரிகள் அட்வைஸ் தந்தனர்..
பிறகு, அமுதாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பிரசவத்துக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.. இந்த சம்பவம் அப்போது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
ராஜஸ்தான் - 16 குழந்தைகள்
இதோ ராஜஸ்தானின் உதய்பூரில் ஒரு சம்பவம் நேற்று நடந்தள்ளது.. இங்கு வசித்து வரும் தம்பதி ரேகா - காவ்ரா கல்பேலியா.. இதில் ரேகாவுக்கு 55 வயதாகிறது.. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. பழைய பொருட்களை சேகரித்து அதை விற்று வரும் பணத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வருபவர்கள்.
இவர்களுக்கு 16 குழந்தைகள் உள்ளனர்.. ஆனால், அதில் 4 மகன்களும், ஒரு மகளும் 5 குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டன. மற்ற 5 பிள்ளைகளுக்கு திருமணமாகிவிட்டது. மிச்சமுள்ளவர்களும் இப்போது திருமண வயதை எட்டிவிட்டனர்..
இந்நிலையில், தன்னுடைய 55 வயதில், 17வது முறையாக ரேகா கர்ப்பமடைந்த நிலையில், ரேகாவுக்கு பிரசவ வலியும் வந்துள்ளது.. எனவே, அருகிலிருந்த தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. தற்போது பிரசவம் முடிந்து குழந்தை பிறந்துள்ளது.. தாயும், சேயும் நலமுடன் இருக்கிறார்கள்.
ட்விஸ்ட் தந்த ரேகா
ஆனால், இங்குதான் ஒரு டுவிஸ்ட் நடந்துள்ளது.. அதாவது தனக்கு 16 குழந்தைகள் ஏற்கனவே பிறந்திருப்பதை மறைத்து, இது 4வது பிரசவம் என்று டாக்டரிடம் பொய் சொல்லி அட்மிட் ஆகியிருக்கிறார் ரேகா.. டெலிவரி முடிந்தபிறகுதான் டாக்டர்களுக்கே உண்மை தெரியவந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த சுகாதார மையத்தின் டாக்டர் ரோஷன் சொல்லும்போது, "ரேகா அனுமதிக்கப்பட்டபோது, இது அவரது 4வது குழந்தை என்று குடும்பத்தினர் எங்களிடம் சொன்னார்கள்.. பிறகுதான் இது அவரது 17வது குழந்தை என்பது தெரியவந்தது" என்றார்.
குப்பைகள் சேகரிப்பு
எவ்வளவு வறுமை இழந்தாலும் சரி, இந்த குழந்தையை பெற்றெடுத்துவிட வேண்டும என்று தம்பதி இருவருமே உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்த தம்பதியினர் தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் மிகவும் கஷ்டப்பட்டே வந்துள்ளனர்.. இவர்களுக்கென்று சொந்த வீடு கிடையாது. குழந்தைகளை வளர்க்க நிறைய கடன்களையும் வாங்கியிருக்கிறார்களாம்..
17வது குழந்தையை தன்னுடைய அம்மா ரேகா பெற்றெடுத்தது குறித்து மகள் சீலா கல்பெலியா சொல்லும்போது, "நாங்கள் சிரமத்தில்தான் இருக்கிறோம்.. என்னுடைய அம்மாவுக்கு இவ்வளவு குழந்தைகள் இருப்பதை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.. என்னுடைய அப்பா, அம்மா 2 பேருமே குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இதனால் எங்களை படிக்க வைக்க முடியவில்லை" என்றார்.
வீடு கேட்டு கோரிக்கை
17 குழந்தைகளுக்கு அப்பாவான காவ்ரா கல்பெலியா சொல்லும்போது, ''குழந்தைகளுக்கு சாப்பாடு தருவதற்கே நிறைய கஷ்டங்கள் இருக்கிறது. குழந்தைகளை திருமணம் செய்து வைப்பதிலும் பண பிரச்சனை இருக்கிறது.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொந்தரவுகளை அனுபவித்து வருகிறேன்.. சொந்த வீடு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று காவ்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.
வறுமையில் வாடும் ரேகா குடும்பத்தில் மீண்டும் ஒரு குழந்தை பிறந்திருப்பது அப்பகுதி மக்களை மட்டுமல்லாமல், பிரசவம் பார்த்த டாக்டர்களுக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications