தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: தமிழகத்தின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (பொறுப்பு) இன்று பொறுப்பேற்றார். அவருக்கு ராஜ்பவனில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து கேரள ஆளுநராக உள்ள அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் இன்று தமிழகத்தில் உள்ள மக்கள் மாளிகையில் (ராஜ்பவன்) பொறுப்பேற்றார். அவருக்கு தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொறுப்பு ஆளுநருக்கு ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார். இவர் பதவியேற்ற நாள் முதல் தமிழக அரசுடன் முரண்பட்டே இருந்தார். தமிழக சட்டசபையில் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரின் போதும் கூட அரசின் அறிக்கையை படிக்க மறுத்து வெளியேறினார்.
ஆளுநரை மாற்றுமாறு பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில் மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா செய்த நிலையில் தமிழக ஆளுநராக இருந்த ரவி, மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications