விஜய்யை நம்பி மட்டுமல்ல சீமானை நம்பியும் இளைஞர்கள் போகாதீர்கள்.. போட்டு தாக்கும் ராஜேஸ்வரி பிரியா
சென்னை: மதுவுக்கும் புகைக்கும் அடிமையானவர்கள்தான் விஜய் ரசிகர்கள் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சித்தலைவர் ராஜேஸ்வரி பிரியா கூறியுள்ளார். விஜய்யை நம்பி யாரும் பின்னால் செல்ல வேண்டாம். சீமானை நம்பியும் இளைஞர்கள் செல்லக்கூடாது என்றும் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார். ஒன் இந்தியா தமிழ் அரசியல் யூடுயூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
நான் ரெடிதான் வரவா என்று விஜய் பாடியது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும் சிலர் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
அனைத்து மக்கள் அரசியல் கட்சித்தலைவர் ராஜேஸ்வரி பிரியா லியோ படத்தில் வரும் நான் ரெடி பாடலுக்கு எதிராகவும், விஜய்க்கு எதிராகவும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்.
விஜய் மீது எனக்கு கோபம் இல்லை. சமூகத்தின் மீதான அக்கறைதான். தொடர்ச்சியாக நான் குரல் கொடுத்துள்ளேன். டாஸ்மாக் கடைகளுக்குள் சென்று நேரில் சென்று பேசியுள்ளேன். பல திரைப்படங்கள் பற்றி கருத்து கூறியுள்ளேன். விஜய் படத்தின் பாடலுக்கு எதிராக நான் குரல் கொடுத்தது பலருக்கும் பெரிய விசயமாக தெரிகிறது. நான் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது என்று யாருமே எதுவுமே சொல்லவில்லை.

சீமான் சொல்வதை கேட்டால் பொறுப்பான பதிலாக தெரியவில்லை. இதுக்கு முன்னாடி ஊத்திக்கோ ஊத்திக்கோ என்று பாடி நடித்திருக்கிறார் என்று சீமான் சொல்வது எல்லாம் பொறுப்பான பதிலாக தெரியவில்லை. விஜய்யை நம்பி இளைஞர்கள் போகக்கூடாது என்று நான் சொல்வது போல சீமானை நம்பியும் இளைஞர்கள் பின்னால் போகக்கூடாது. ஒரு தவறை சுட்டிக்காட்டும் போது இது தவறு என்று உங்களால் சொல்ல முடியவில்லையா? யாரையாவது சொல்ல சொல்லுங்கள்.. பத்தவைத்து புகையை இழுத்தால் கிக்கு என்பது நல்ல வரி என்று சீமானை சொல்ல சொல்லுங்கள்.
உங்களை நம்பி இருக்கும் இளைஞர்களை போய் இப்படி செய்யலாமா? நேர்மையான அரசியல் நீதியான அரசியல்... இன்னும் ஏதாவது சொல்லி விடுவேன். இந்த மாதிரி எல்லாம் மக்களை ஏமாற்றாதீர்கள். விஜய் மட்டுமல்ல யாராக இருந்தாலும் நான் எதிர்ப்பேன். திரைப்படங்கள், புகை, மது பழக்கத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. உங்கள் பாடலில் உள்ள அர்த்தம் தெரியாமல் அதை ஏன் வெளியிட்டீர்கள் என்றும் ராஜேஸ்வரி பிரியா கேட்கிறார்.
நான் கேட்கும் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. நான் சொல்வதையே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். நான் சமூகத்திற்கு எதிரான கருத்தாகவும் நினைக்கிறார்கள். நான் சரியான கருத்தை சொல்கிறேன். ஆனால் ரசிகர்கள் மூடர் கூட்டமாக குருட்டுத்தனமாக நம்பிக்கையோடு இருக்கின்றனர் என்றும் ராஜேஸ்வரி பிரியா கூறியுள்ளார். உயிரை சுமந்து கொண்டு வாழ வேண்டுமா? விஜய் தயாராக இருக்க வேண்டும் யார் மக்களுக்கானவர்கள் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்துவேன் என்றும் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications