ரஜினி, அஜித் எவ்வளவோ மேல்.. மொத்தமாக சிக்கிக் கொண்ட விஜய்! செந்தில்வேல் பிடித்த பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சம்பவத்திற்கு பிறகு இந்த நிமிடம் வரை விஜய் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.. 41 பேர் இறந்து போய் இருக்கிறார்கள். இன்றும் அவர்களை போய் பார்க்கவில்லை. களத்தில் போய் நிற்கவில்லை. நன்றாக டான்ஸ் ஆடுவார் என்பதற்காக ஒருவரை முதல்வர் ஆக்க முடியுமா? என்று காட்டமாக கேட்ட பத்திரிகையாளர் செந்தில் வேல், அஜித், ரஜினி ஒரு விஷயத்தில் விஜய்யை விட மேல் என்றும் உதாரணத்துடன் பேசினார்.

பிரபல பத்திரிகையாளர் செந்தில் வேல் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது விஜய்யின் அரசியல் செயல்பாடு, பாஜக, அதிமுக கூட்டணிக்குள் விஜய் செல்கிறாரா? என்பது உள்ளிட்டவை பற்றி விரிவாக பேசினார். அவரது பேட்டியின் விவரம் வருமாறு:-

rajini-and-ajith-much-better-than-vijay-he-is-completely-trapped-to-bjp-says-senthilvel

ஆர் பி உதயகுமார் பேச்சுக்கு பதில்

திமுக தப்பித்தவறி ஆட்சிக்கு வந்துவிட்டால் விஜய்யை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியதற்கு பதில் அளித்த பத்திரிகையாளர் செந்தில் வேல் "விஜய் அதிமுக கூட்டணிக்கு வராமல் போனால் எடப்பாடி பழனிசாமியால் எதிர்க்கட்சி தலைவர் கூட ஆக முடியாமல் போயிடும். யார் வந்தாலும் வராவிட்டாலும் அதிமுக உறுதியாக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை ஆர்பி உதயகுமாருக்கே இல்லை. அதனால் தான் தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்தால் என்ற வார்த்தையை விடுகிறார்" என்றார்.

அதிமுகவை விட தவெக தான் பெரிய கட்சி

மேலும் அவர் கூறியதாவது:- புலிக்கு பயந்தவங்க எல்லாரும் என் மேலே வந்து படுத்துக்கொள்ளுங்கள் என்று பழமொழி உண்டு. அதுபோலத்தான் எடப்பாடி விஜய்யை அழைத்துக்கொண்டு இருக்கிறார். விஜய் முதல்வர் வேட்பாளர், எடப்பாடி பழனிசாமி தான் துணை முதல்வர் வேட்பாளர். இன்றைக்கு தேதிப்படி அதிமுகவை விட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான் பெரிய கட்சி.

இதுவரைக்கும் வாக்கு வங்கியையே நிரூபிக்காத ஒரு கட்சிக்கு வாசலிலே போய் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கமும், ஆர் பி உதயகுமார் ஒரு பக்கமும் குத்த வைத்து உட்காந்திருக்க வேண்டும். கரூரில் 41 பேர் மரணத்தை கண்டு அஞ்சி, பயந்து, நடுங்கி அதிமுக - பாஜக கூட்டணியில் சேர வேண்டும் என்று விஜய் நினைத்தால் அது அவருக்கு எவ்வளவு பெரிய அவமானம்.

நடிகர் அஜித்குமாரை பாராட்டுகிறேன்

எடப்பாடி பழனிசாமி பிள்ளையார் சுழி போட்டாச்சு.. பெரிய கட்சி கூட்டணிக்கு வரப்போகுது என்று சொல்கிறார்.. அப்படி சொல்லும் போது விஜய் ஏன் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஒரு வார்த்தைக்கூட ஏன் சொல்லவில்லை.. இந்த விஷயத்தில் நடிகர் அஜித்குமாரை பாராட்டுகிறேன். அரசியலை பயன்படுத்தி அஜித்தை பாராட்டுகிறேன் என்றெல்லாம் இல்லை.. ஒரு தேர்தல் நேரத்தில் அஜித்குமார் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்..

உடனடியாக அடுத்த சில நிமிடங்களில் அஜித்குமாரிடம் இருந்து ஒரு அறிக்கை வருது.. நான் என் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டேன். என் ரசிகர்கள், ரசிகர் மன்றம் என்று சொல்லி யாரையும் குறிப்பிடுவது எனக்கு உடன்பாடு இல்லை. என்று அஜித் குமார் அறிக்கை விடுகிறார். இந்த கிளாரிட்டி ஏன் உங்களிடம் இல்லை. ஏன் நீங்க சொல்லவில்லை.. அப்போ உங்களிடம் பயம் இருக்கு..

ரஜினி சார் கூட சொன்னார்

ரஜினிசார் கூட ஒரு முறை சொன்னார்.. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச பார்க்கிறார்கள். எனக்கும் காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள். நானும் சிக்க மாட்டேன்.. திருவள்ளுவரும் சிக்க மாட்டார்.. என்று ரஜினி கூட சொன்னார். ஏன் உங்க கிட்ட அந்த கிளாரிட்டி இல்லை. ஏனென்றால் உங்களுக்கு பயம் இருக்கு. உங்களது மவுனம் அச்சத்தின் வெளிப்பாடு..

நான் உதாரணத்திற்கு சொல்கிறேன்.. ஒரு வாதத்திற்கு, முதல்வர் அப்படி சொல்ல மாட்டார்.. பாஜகவிடம் ரூ.6000 கோடியை பெற்றுக்கொண்டு பாஜகவோடு கூட்டணிக்கு செல்ல விஜய் சம்மதம் தெரிவித்து இருப்பதாக எனக்கு தகவல்கள் கிடைக்கின்றன என்று திமுக தலைவர் ஸ்டாலினோ அல்லது வேறு யாரோ என்றால் விஜய் என்ன செய்வார். உடனடியாக இதற்கு மறுப்பு சொல்வாரா இல்லையா?

இனி அமித்ஷா கையில் தான்

சிபிஐ விசாரணையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் பாஜகவின் கைப்பாவை தான் சிபிஐ. ஆனால் நீங்கள் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று நீங்க நீதிமன்றத்தில் வாதம் வைத்தீர்களா?, ஆதவ் அர்ஜுனா கூட சொன்னார் சிபிஐ விசாரணை என்பது குற்றவாளியை தப்பிக்க வைப்பது, வழக்கை நீண்ட நாட்களுக்கு கொண்டு செல்வதற்கு என்று பேசியிருக்கிறார். விஜய் கூட சிபிஐ விசாரணை என்றால், பாஜகவோடு, ஆர்.எஸ்.எஸோடு ரகசிய கூட்டு என்று சொன்னார்... இனி அமித்ஷா கையில் தான் எல்லாமே..

இந்த நிமிடம் வரை விஜய் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.. 41 பேர் இறந்து போய் இருக்கிறார்கள். இன்றும் அவர்களை போய் பார்க்கவில்லை. களத்தில் போய் நிற்கவில்லை. நன்றாக டான்ஸ் ஆடுவார் என்பதற்காக ஒருவரை முதல்வர் ஆக்க முடியுமா.. பிரபுதேவா தான் முதல்வராக இருப்பார். நல்லா காமெடி பண்ணுவார் என்பார் என்றால் இப்போது வடிவேல் தான் முதல்வராக இருப்பார்.. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+