அப்படியானால் "ஹரி தாதா"வை மக்களோடு சேர்ந்து எதிர்த்த "காலா" பலவீனமானவரா?
Recommended Video

சென்னை: ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் அப்ப பலசாலி யார் என்று ரஜினி கேட்கிறார். அதாவது அந்த ஒருவர்தான் பலசாலி என்பது ரஜினியின் மறைமுக கூற்று. இது புரியவில்லை. அப்படியென்றால், நரகராசுரன் உள்ளிட்ட அசுரர்களை தேசங்கள், கூடி எதிர்த்ததே. அப்படியானால் அசுரர்கள் நல்லவர்கள், பலசாலிகள், எதிர்த்தவர்கள் பலவீனமானவர்கள் என்று அர்த்தம் வந்து விடாதா.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பதாக சொன்ன போதிலிருந்து அவர் பாஜக ஆதரவாளர் என பகிரங்கமாக சிலர் வெளிப்படுத்தினர். எனினும் ரஜினி அதை சில சமயங்களில் மறுத்து வந்தார். ஆனால் ஆணித்தரமாக எப்போதுமே அவர் மறுத்ததில்லை.
செய்தியாளர்கள் சந்திப்பு எப்போது நடத்தினாலும் ஏதாவது ஒரு குழப்பமான பதிலையே தருவதையும் வாடிக்கையாகவே வைத்திருந்தார். அந்த வகையில் 7 தமிழர்கள் விடுதலை குறித்து ரஜினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது யார் அந்த 7 பேர் என கேட்டார்.
[இனி எதற்கு முக்காடு.. பகிரங்கமாகவே பாஜகவுடன் கை கோர்க்கலாம் ரஜினி]

நீங்கள் சொல்லுங்கள்
இது பெரும் சர்ச்சையான நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் அதற்கு விளக்கம் அளித்தார். அப்போது தான் யார் என்று இன்னுமா புரியவில்லை என்பது போல் ஒரு பதிலை சொல்லிவிட்டு சென்றார். அதாவது பாஜகவை எதிர்க்கட்சியினர் எதிர்க்கின்றனரே என்ற கேள்விக்கு 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்பதை நீங்கள் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

புராணம்
அதாவது தான் பாஜகவின் ஆதரவாளர் என்பதை பச்சையாக வெளிப்படுத்திவிட்டார். இதில் ரஜினியிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது. அதை அவருக்கு தெரிந்த சினிமா மற்றும் புராணம் ஆகியவற்றில் இருந்தே கேட்கலாம்.

ரோபோ
ரஜினி நடித்த ரோபோ படத்தில் சிட்டியையும் ரஜினி, போலீஸ், மாவட்ட நிர்வாகம் என அனைவரும் எதிர்ப்பவர். அப்படியென்றால் சிட்டியால் நாட்டுக்கு கெடுதல் என நினைத்து எதிர்த்தனரா இல்லை சிட்டி பலசாலி என்பதால் எதிர்த்தனரா. காலா படத்தில் ஹரி தாதாவை மும்பைவாசிகளுடன் ரஜினி எதிர்த்ததால் ஹரி தாதா கெட்டவரா இல்லை பலசாலியா.

வாய்ப்பில்லை
நரகாசுரனையும் மற்ற அசுரர்களையும் தேவர்கள், இந்திரர்கள் ஆகியோருடன் இணைந்து தெய்வங்கள் வதம் செய்ததை புராணக் கதைகளில் கேட்டிருக்கிறோம். ரஜினி அடிக்கடி பயன்படுத்தும் யுத்தம், போர் ஆகியவை வரும் காலங்களில் எதிரியை எதிர்த்து அந்நாட்டு மன்னர், மக்கள் போரிடுவது எதனால் என்பதை வரலாறு மூலம் தெரிந்து கொண்டுள்ளோம். இது ரஜினிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

உலகம் அறிந்த உண்மை
இப்படியிருக்கையில் எதை வைத்து எதிர்ப்பவர்கள் பலவீனமானவர்கள் என்றும் பாஜகவினர் பலசாலிகள் என்ற முடிவுக்கு ரஜினி வந்தார் என்பது இன்னும் புலப்படாமல் உள்ளது. புராணங்கள், வரலாறுகள், சினிமா என எல்லாவற்றிலும் கெட்டவர்களை நல்லவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பதை பார்த்துவிட்டும் கேட்டுவிட்டும் ரஜினி இப்படி கூறுகிறார் என்றால் இது எத்தனை அபத்தம். அதை விட முக்கியமானது, கெட்டவர்களைத்தான் நல்லவர்கள் அல்லது அவர்களை விரும்பாதவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை இல்லையா.

சூசகம்
பல்வேறு புராணங்களையும் வரலாறுகளையும் புத்தகங்களையும் படித்து தெரிந்து கொண்டு ரஜினிக்கு நாம் எதையும் சொல்ல வேண்டியதில்லை. நாடாளுமன்றத் தேர்தலை பொருத்த மட்டில் பாஜகவின் கொள்கைகளுக்கு மாறாக ஒத்த கொள்கைகளை உடைய எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர். அவ்வளவே, அதற்காக பாஜக பலசாலி என்று அர்த்தம் இல்லை. நாட்டுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை முன்னெடுக்கிறது என்று அர்த்தம். இவ்வாறு சுற்றி வளைத்து சொல்வதற்கு ஆமாம் நான் பாஜகவுடன் கூட்டணி வைக்க போகிறேன் என்று ரஜினி சூசகமாக இல்லாமல் பளீச்சென சொல்லிவிடலாமே.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்!












Click it and Unblock the Notifications