“டுவிஸ்ட்” வைத்த ரஜினி.. கடிதத்தின் “டாப் ஸ்பாட்டில்” அண்ணாமலை - “அந்த” இடத்தில் உதயநிதி மிஸ்ஸிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 73 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் உள்ள சில சுவாரஸ்யங்களை அலசுவோம்.

தமிழ்நாடு மக்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் உலக புகழ்பெற்ற திரைப்பட நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். அரசியல் ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் ரஜினியின் நடிப்பையும், ஸ்டைலையும் விரும்பாதவர்கள் மிகக்குறைவு.

இப்படி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற தனது மற்றும் ரசிகர்களின் விருப்பத்துக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுரை எழுதினார்.

வாழ்த்து மழை

வாழ்த்து மழை

இந்த நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அவருக்கு ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.

முதலமைச்சர், ஆளுநர் வாழ்த்து

முதலமைச்சர், ஆளுநர் வாழ்த்து

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்தில், "என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார். இதேபோல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

இதேபோல் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "தன் தனித்துவ நடிப்பால் எல்லைகளை கடந்து அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துள்ள தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

கமல்ஹாசன் வாழ்த்து

கமல்ஹாசன் வாழ்த்து

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்." என்று பதிவிட்டார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

முதலமைச்சர் ஆளுநருக்கு ரஜினி நன்றி

முதலமைச்சர் ஆளுநருக்கு ரஜினி நன்றி

இந்த நிலையில் தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் ரஜினிகாந்த். அதில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய ஆளுநர் திரு. ரவி அவர்களுக்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலைக்கு நன்றி

ஈபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலைக்கு நன்றி

அடுத்த கடிதத்தின் முதல் பத்தியில் அரசியல் வாதிகள் பெயரை குறிப்பிட்டு ரஜினி நன்றி நன்றி தெரிவித்துள்ளார். அதில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிச்சாமி, திரு ஓ.பன்னீர் செல்வம், திரு.அண்ணாமலை, திரு.T.K.ரங்கராஜன், திரு.வைகோ, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.G.K.வாசன், திரு.திருநாவுக்கரசு,திரு. A.C.ஷண்முகம், திரு.தொல் திருமாவளவன், திரு.சீமான் அவர்களுக்கும், மத்திய, மாநில முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள், அதிகாரிகள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி." என்று தெரிவித்துள்ளார். இதில் கமல்ஹாசன், உதயநிதி பெயர்கள் இடம்பெறவில்லை.

கமல்ஹாசன், உதயநிதிக்கு நன்றி

கமல்ஹாசன், உதயநிதிக்கு நன்றி

2 வது பத்தியில் சினிமா பிரபலங்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். அதில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் திரு.கமலஹாசன், திரு. இளையராஜா, திரு.வைரமுத்து, திரு.ஷாருக்கான், திரு. அக்சய் குமார், திரு.மோகன்லால், திரு. மம்மூட்டி, திரு. சிவராஜ்குமார், திரு.சரத்குமார், திரு. உதயநிதி ஸ்டாலின், திரு. தனுஷ், திரு சிவகார்த்திகேயன் மற்றும் திரையுலகத்தை சார்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி." என்றார். இதில் கமல்ஹாசன், உதயநிதி பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சச்சனுக்கு நன்றி

சச்சனுக்கு நன்றி

விளையாட்டு மற்றும் பல துறைகளிலிருந்து எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த திரு. சச்சின் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பொது மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+