சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமலுடன் கூட்டணி அமைத்து முதல்வராக்குவாரா ரஜினி?.. விரைவில் ஆலோசனையாமே!.. பரபரக்கும் அரசியல்

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி தொடங்கவுள்ள கட்சியுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி வைக்க தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு திராவிட கட்சிகளும் கூட்டணி அமைத்தோ அல்லது தனித்தோ தேர்தலை சந்தித்து மாறி மாறி ஆண்டு வருகின்றன. ஜெயலலிதாவும், கருணாநிதியும் மறைந்தவுடன் கமல்ஹாசன் தமிழக அரசை விமர்சிக்கத் தொடங்கினார்.

இதையடுத்து 2018-இல் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ராமநாதபுரத்தில் கமல்ஹாசன் தொடங்கினார். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் கமல் கட்சி போட்டியிட்டது. ஆனால் நல்ல வாக்கு சதவீதத்தை எடுத்து பல இடங்களில் மூன்றாம் இடத்தை பிடித்தது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

கமல்ஹாசனை போல திமுக, அதிமுகவுக்கு மாற்றான ஒரு அரசியலை முன்னிறுத்த வேண்டும் என ரஜினிகாந்தும் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவர் கடந்த 2017ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக அறிவித்து கிட்டதட்ட 3 ஆண்டுகள் ஆன நிலையில் அவர் கட்சியை தொடங்கவில்லை.

போயஸ் தோட்டம்

போயஸ் தோட்டம்

ஆனால் கடந்த வியாழக்கிழமை அன்று அவர் ஜனவரி மாதம் கட்சித் தொடங்குவதாக அறிவித்தார். இதற்கான அறிவிப்பை அவர் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ரஜினிகாந்த் போயஸ் தோட்ட இல்லத்தில் பேசிய போது மாத்தணும் எல்லாத்தையும் மாத்தணும் என கூறியுள்ளார்.

திமுக

திமுக

இதனால் அவர் நிச்சயம் அதிமுக, திமுகவுடன் கூட்டணி செல்ல மாட்டார். அதே போல் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. எனவே தன்னை போல் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்பும் கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சி அறிவிப்பு

கட்சி அறிவிப்பு

சினிமாவில் இருவரும் உச்சத்தில் இருந்தாலும் போட்டி போட்டு கொண்டு நடித்தனர். அவர்களது ரசிகர்கள் அடித்துக் கொண்டனரே தவிர இவர்கள் இருவரும் இன்று வரை நண்பர்கள்தான். இதனடிப்படையில் கமல்ஹாசனும் தனது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு ரஜினியை கேட்டுக் கொண்டிருந்தார். அது போல் சட்டசபை தேர்தல் 2021-இலும் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என அவரது கட்சி அறிவிப்புக்கு முன்னர் கூறியிருந்தார்.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சியுடன் கமல்ஹாசன் கட்சி கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக அடுத்த மாதம் இரு கட்சியின் நிர்வாகிகளும் சந்தித்து பேச வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. அவ்வாறு கூட்டணி அமைந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கேள்வி எழும்.

நீண்ட கால நண்பர்

நீண்ட கால நண்பர்

கமலும் ரஜினியும் கூட்டணி அமைத்தால் யார் முதல்வர் என்ற கேள்வியின் போது ஸ்ரீபிரியா, கமல்தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்றார். ஆனால் ரஜினிகாந்த் ஏற்கெனவே லீலா பேலஸில் பேசிய போது முதல்வர் வேட்பாளராக தான் இருக்க விரும்பவில்லை என தெரிவித்திருந்தார். அதற்கு தகுதியான ஒருவரை தேர்வு செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார். எனவே ரஜினியும் கமலும் கூட்டணி அமைத்தால் யாரோ ஒரு நிர்வாகியை முதல்வராக ரஜினி நியமிப்பதற்கு பதில் தனது நீண்ட கால நண்பரான கமலை நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

சந்தோஷம்

சந்தோஷம்

என்ன இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் ரஜினி சொன்னால் எதையும் செய்வார்கள் ரசிகர்கள். இது 1996-இல் கண்கூடாகவே நாம் பார்த்துள்ளோம். அரசியல் கட்சியை தொடங்கி ரசிகர்களை சந்தோஷப்படுத்திய ரஜினி முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அவர்களை நிச்சயம் சமாதானப்படுத்துவார்.

English summary
Rajinikanth and Kamal Party will join for alliance? What will be the move? Who will be the CM?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X