விஜய் கட்சியில் செங்கோட்டையன் இணைந்துள்ளாரே.. சட்டென வந்த கேள்வி.. ரஜினி கொடுத்த ரியாக்சன்!
சென்னை: தவெக தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்திருப்பது தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்துள்ள ரியாக்சன் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதேபோல் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருப்பதாக கூறிய ரஜினிகாந்த், 50 ஆண்டுகள் கடந்தும் சினிமா பயணம் தொடர்வதற்கு ரசிகர்களின் ஆசீர்வாதமே காரணம் என்றும் கூறியுள்ளார்.
1996ஆம் ஆண்டு முதல் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், 2020ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்தார். கட்சி தொடங்குவதற்கான அத்தனை பணிகளையும் மேற்கொண்டு வந்த ரஜினிகாந்த், 2020ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று பின் வாங்கினார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. ஆனால் விஜய் திடீரென அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இதன்பின் ரஜினிகாந்த் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து கவனித்து வருகிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் நெருக்கம் காட்டி வருகிறார்.
மறுபுறம் அண்ணாமலையுடன் தனியாக சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது ஓபிஎஸ், சீமான் உள்ளிட்டோரும் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சென்று சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவா திரைப்பட திருவிழாவுக்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளது. தற்போது கோவாவில் வாழ்நாள் சாதனையாளர்களை மத்திய அரசு கெளரவிக்க உள்ளது. அதற்கான விழாவில் பங்கேற்க செல்கிறேன். சினிமாவில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து பயணிப்பதற்கு ரசிகர்களின் ஆதரவுதான் காரணம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்துள்ளார்.. அதுதொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், கருத்து சொல்ல விரும்பவில்லை என்று வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றார். ரஜினிகாந்தின் ரியாக்சன் சோசியல் மீடியாவில் அவரது ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.
-
Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள் -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரிகையாளர்களை மிரட்டினாரா செங்கோட்டையன்.. முற்றிய வாக்குவாதம்.. ப்ரஸ்மீட்டில் பரபரப்பு












Click it and Unblock the Notifications