கொரோனா: வாழ்வாதாரம் பாதித்தோருக்கு உதவுங்கள்.. தமிழக அரசுக்கு ரஜினி கோரிக்கை
சென்னை: கொரோனா வைரஸால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித் தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 176 ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், பெரிய கடைகள், மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டது.

இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள், புராதன சின்னங்கள், கோயில்கள் அருகே கடை வைத்து பிழைக்கும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா விடுமுறையால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்களாகிய நாமும் இணைந்து கொடிய வைரஸ் பரவலை தடுக்க ஒத்துழைப்போம்.

இந்த இக்கட்டான சூழலில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித் தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications