1/2 Beer: ரஜினிக்கு மேடை நாகரீகமே இல்லையே! இளையராஜா பீர் குடிச்சத யாராவது கேட்டாங்களா? ரசிகர் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் "அரை பாட்டில் பீர் அடிச்சிட்டு இளையராஜா ஆடிய ஆட்டம் இருக்கே, விடிய விடிய கிசு கிசுதான். ஹீரோயின்கள் மேல அவ்ளோ லவ்" என ரஜினிகாந்த் பேசியிருந்தது, பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இது குறித்து சமூகவலைதள பக்கத்தில் விவாதங்கள் தொடங்கியுள்ளன.

Rajinikanth Ilaiyaraja

இளையராஜாவுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்த நிலையில் நடுவில் புகுந்து இளையராஜா அரை பாட்டில் பீரை குடித்தது குறித்து பேசியதெல்லாம் இருவரது வயதிற்கும் தகுந்ததல்ல என்கிறார்கள்.

இதனால் இளையராஜா ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். தொடர்ந்து நிறைய சந்தர்ப்பங்களில் இளையராஜாவை மட்டம் தட்டி வருவதே ரஜினிக்கு வாடிக்கையாகிவிட்டது என்கிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி சர்ச்சை

இதுகுறித்து இளையராஜா ரசிகர் எழுதிய திறந்த மடலில் ஏற்கெனவே ரஜினி பேசிய சர்ச்சை பேச்சுக்களை தொகுத்துள்ளார். அந்த மடலில் கூறியிருப்பதாவது: "30 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும், அப்போது ஒரு விழாவில் ரஜினியும் இளையராஜாவும் பங்கு கொண்டனர். அதில் பேசிய ரஜினி, "நாங்கள் எல்லாம் வெயில், மலை, காடு, மேடு, கரடுமுரடான இடங்களில் உயிரை பணயம் வைத்து நடித்து சம்பாதிக்கிறோம். ஆனால் இவரு (இளையராஜா) பாருங்க, ஏசி ரூம்ல உட்கார்ந்துகிட்டுகோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் என பேசியிருந்தார்.

அப்போது அந்த பேச்சு விவாதமானது. சினிமா என்பது டீம் வொர்க்! இதில் அவரவரது திறமைக்கேற்ப வேலை இருக்கிறது. அப்படிபார்த்தால் அதே காடு மேடு மலை, வெயில், மழையில் லைட்மேன் உள்ளிட்ட டெக்னீசியன்கள் சம்பாதிக்கும் பணத்தை விட ரஜினி கோடிகளில் சம்பளம் வாங்குவதில்லையா? அவர்களின் உயிருக்கு பாதுகாப்போ இன்சூரன்ஸோ கூட இல்லாத நிலையில் பணியாற்றுகிறார்கள்.

ஏசி அறையில் இளையராஜா

ஏன் பேசாமல் ரஜினியே ஏசி அறையில் உட்கார்ந்து கம்போஸிங் செய்துடலாமே! அது போல் விவேக்கை பற்றி பேசிய ரஜினி, "இவ்வளவு விவரமாக இருக்காரே இவர் பிராமணராக இருப்பாரோ என நினைத்தேன். ஆனால் அவர் தேவர் சமூகத்தை சேர்ந்தவர்" என்று ஒரு மேடையில் ஒருவரது ஜாதி குறித்து பேசியிருந்தார்.

லட்சுமி வருதா

அது போல் இளையராஜாவுக்கு நடத்தப்பட்ட விழாவில் கூட "என்ன சாமி லட்சுமி வருதா" என காப்பிரைட்டுக்கான பணத்தை குறித்து ஒரு மேடையில் கேட்டிருந்தார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், சோ ஜெயலலிதாவின் குணம் குறித்து ரஜினியிடம் தனிப்பட்ட முறையில் கூறியிருந்ததை, பொதுமேடையில் அதுவும் ஜெயலலிதா முன்னிலையில் ரஜினி கூறியதால் சோ தலையில் அடித்துக் கொண்டார்.

கூலி படம்

ஒவ்வொரு மேடையிலும் இது போன்ற தேவையற்ற பேச்சுகளை பேசி வருகிறார். அது போல் முதல்வர் கலந்து கொண்ட விழாவில், லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ஸ், ஓல்டு ஸ்டூடன்ஸ்ன்னாலே எப்போது தொல்லைதான் என துரைமுருகன் உள்ளிட்டோரை கிண்டல் செய்தார். கூலி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சவுபினை வழுக்கை தலை என்றும் மகள் வயது ஸ்ருதியை கிளாமர் ஹீரோயின் என்றும் ரஜினி பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரை பீர் பாட்டில்

அதன் பிறகு இளையராஜாவுக்கு நேற்று தமிழக அரசு சார்பில் நடந்த பாராட்டு விழாவில், "அரை பீர் பாட்டில் குடித்துவிட்டு இளையராஜா ஆட்டம் போட்டது, கிசு கிசு பேசியது, ஹீரோயின்கள் மீது அவ்வளோ லவ், அதுதான் இசையா வந்தது" என ரஜினி பேசியது மிகவும் தவறு. முதல்வர் முன்னிலையில் பீர் பாட்டில் குறித்தெல்லாம் பேசுவதா?

இளையராஜாவுக்கு 83 வயது

இளையராஜாவுக்கு 83 வயதாகிறது, அவர் குறித்து இது போன்ற தரம் தாழ்ந்த விஷயங்கள் எல்லாம் தேவையா? அது போல் உங்களுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்தும் மட்டம் தட்டுவது போல் பேசுவதும் தவறு! அவர்கள் நடிப்பது என்பது இயக்குநர்களின் தலைவலி, தயாரிப்பாளர் கவலைப்பட வேண்டியது! அதை ஏன் ரஜினி மண்டையில் ஏற்றிக் கொள்கிறார். பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு மற்ற கலைஞர்களை அவமதிப்பது போல் பேசுவது தவறு!

பாராட்டு விழா

ஒரு பாராட்டு விழாவில் அவரை பற்றி நல்ல விஷயங்களை பேசியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தேவையற்ற சம்பவங்களை எல்லாம் பேசுவதை ரஜினி எப்போதுதான் மாற்றிக் கொள்வார் என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. என்னதான் இந்த பீர் குடித்த விஷயத்தை இளையராஜா தொடங்கி வைத்தாலும் அவர் அத்துடன் நிறுத்திவிட்டார். ரஜினி வந்து கிசுகிசு, ஹீரோயின் மீது லவ்வு என்றெல்லாம் பேசிவிட்டார். இளையராஜா பேசியதும் தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை சினிமா விழாக்களில் பேசியிருக்கலாம். அதைவிட்டு பாரத ரத்னா கோரி பாராட்டு நடத்தப்படும் ஒரு விழாவில் இப்படி பேசியது பலருக்கும் பிடிக்காமல் போய்விட்டது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+