ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்.. குருமூர்த்தி பரபரப்பு பேச்சு
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் வந்தால் தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் அரசியலுக்கு ரஜினி வரவேண்டியது அவசியம் என்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு அவர் அரசியலுக்கு வரப்போகும் செய்தி 2017ம் ஆண்டு தான் வந்தது. அதுவும் ரஜினியே வெளிப்படையாக அரசியலுக்கு வரப்போவதாகவும் கட்சி ஆரம்பிக்கபோவதாகவும் அறிவித்தார்.
ரஜினி ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றினார். கிராமங்கள் வாரியாக மன்றங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.இந்த பணிகளை முடித்தவர் அவர் அரசியல் கட்சிக்கான பெயரை தேர்வு செய்து கட்சி ஆரம்பிப்பார் என்று பார்த்தால்

ஆன்மீக அரசியல்
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தான் போட்யிடுவேன் என்றும் வழக்கான அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும் தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்றும் ரஜினி அறிவித்தார்.

குருமூர்த்தி அழைப்பு
இந்த சூழலில் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி ரஜினியை அடிக்கடி சந்தித்து அரசியலில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்து வந்தார். கடந்த ஆண்டு குருமூர்த்தி அளித்த பேட்டி ஒன்றில், ரஜினி அரசியலுக்கு தேவை என்றும் இன்னொரு எம்ஜிஆராக உருவெடுப்பார் என்றும் கூறியிருந்தார்.

இணைந்து செயல்படுவோம்
இந்நிலையில் அண்மையில் பேட்டி அளித்த கமல் மற்றும் ரஜினி ஆகியோர் தேவைப்பாட்டால் மக்கள் நலனுக்காக நாங்கள் இருவரும் அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

மாற்றம் ஏற்படும்
இதனிடையே மீண்டும் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சென்று குருமூர்த்தி சமீபத்தில் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து தற்போது அவர் கூறுகையில், ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் அரசியலுக்கு ரஜினி வரவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

ரஜினி எப்படி
தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் பெரிய சக்தி திமுக தான் என்று குருமூர்த்தி கடுமையாக சாடினார். அத்துடன் ஆட்சிக்கு வந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர் ரஜினி இல்லை என்றும் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications