கேள்வியே சரியாக கேட்கவில்லை..அப்புறம் நான் எப்படி பதில் சொல்றது கண்ணா- ரஜினி
Recommended Video

சென்னை: ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் குறித்த கேள்வியே சரியாக கேட்கவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 7 பேர் விடுதலையில் தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது.
[ஆஹா.. ரஜினி என்ன சொல்றார்னு பார்த்தீங்களா.. இதை விட கிளியரா சொல்லவே முடியாது!]

சர்ச்சை
இதற்கு ரஜினியோ எந்த ஏழுபேர் என கேள்வி கேட்டுள்ளார். மேலும் எனக்கு தெரியாது. நான் இப்போதுதான் வருகிறேன் என கூறியுள்ளார். இந்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தெரியாது
இதுகுறித்து விளக்கம் அளிக்க ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் தெரியும் என்றால் தெரியும் என சொல்வேன், தெரியாது என்றால் தெரியாது என சொல்வேன், என்றார்.

செய்ய வேண்டும்
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் பற்றி தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து. பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தபோது தொலைபேசியில் 10 நிமிடங்கள் பேசி அவருக்கு ஆறுதல் கூறியவன் நான்.

இலவசமாக
கேள்வியை சரியாக கேட்கவில்லை. நான் இன்னமும் முழுசாக அரசியலில் இறங்கவில்லை. பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.எனது கருத்தை திரித்து கூறாதீர். மக்களுக்கு இலவசம் தரலாம். ஆனால் அது 100 சதவீதமாக அது ஓட்டுக்காக இருக்கக் கூடாது.

பலசாலி
நான் இன்னும் முழுசா அரசியலில் இறங்காததால் பாஜக ஆபத்தான கட்சியா என என்னால் கூற இயலாது. ஒருவரை 10 பேர் எதிர்த்தால் யார் பலசாலி என நீங்கள் சொல்லுங்கள் என கேள்வி எழுப்பி பிரதமர் மோடி பலசாலி என ரஜினிசூசகமாக பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications