நோ.. நோ.. நோ.. இந்த 4 கட்சிகளுடன் கண்டிப்பாக கூட்டணி இல்லை.. ரஜினி பிளான்.. இதுதான் ஆன்மீக அரசியலா!

ரஜினிகாந்த் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்.. யார் யாரை தனது கட்சியில் சேர்க்கவே மாட்டார் என்பது பற்றின ஒரு சில "மேட்டர்" வெளியாகி வருகின்றன!

Recommended Video

    எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம்.. ரஜினிகாந்த்

    நேற்று மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. அது முழுக்க முழுக்க அவர்கள் மன்றம் சம்பந்தப்பட்டது.. நமக்கு ஒரு எல்லை உண்டு என்பதால் அதற்குள் தலையிட்டு சரமாரி விமர்சிக்க முடியாது.

    அதற்கேற்றார்போல், ஆலோசனை விஷயங்களை பொஞ்சாதிகிட்ட கூட சொல்லிடாதீங்க என்று கேட்டு கொண்டுள்ளார். இருந்தாலும் சில விஷயங்கள் லீக் ஆகி உள்ளன.

    பொறுப்புகள்

    பொறுப்புகள்

    இந்த ஆலோசனையில் அரசியல் சமாச்சாரமும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் காற்றில் பறந்து வந்த ஒரு தகவல் என்றாலும், அப்படியே முழுசாக ஒதுக்கிவிட முடியவில்லை. அப்போது ரஜினிகாந்த் தெளிவாக சொன்னது இவைதானாம்.. "கட்சி ஆரம்பிக்க போறோம்.. அதுக்காகதான் உங்ககிட்ட பல பொறுப்பை தந்தேன்.. ஆனாலும் நிறைய பேர் சரியா செயல்படல.. கட்சி ஆரம்பித்தாலும் நான் முதலமைச்சர் கிடையாது.

     யாருடன் கூட்டணி

    யாருடன் கூட்டணி

    ஆனால் கட்சி என் கட்டுப்பாட்டில் இருக்கும்.. திமுக, அதிமுகவில் இருந்து நிறைய பேர் நம்மகிட்ட வர போறாங்க. அவங்களுக்கு முக்கியமான பொறுப்புகளை தர போறேன். அதேபோல பாஜகவுடன் நிச்சயமாக நாம கூட்டணி வைக்க போறது இல்லை.. இஸ்லாமியர்கள் முழுசா பாஜகவை எதிர்க்கும்போது நாம எப்படி அவங்ககூட சேர முடியும்? கூட்டணி வைக்க முடியும்? அதனால பாஜகவுடன் கூட்டணி இல்லை, இல்லை, இல்லை. அதேபோல காங்கிரசுடனும் கூட்டணி இல்லை.

     4 கட்சிகள்

    4 கட்சிகள்

    எப்படி இந்த இரு தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லையோ, அதுபோலவே திமுக, அதிமுகவுடனும் கூட்டணி இல்லை.. இந்த 4 கட்சியுடன் கண்டிப்பா கூட்டணி இருக்காது. அதே நேரத்தில் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம்" என்று ரஜின் சொன்னதாக தகவல்கள் வருகின்றன. சுருக்கமாக 2 தேசிய கட்சிகள், 2 திராவிட கட்சிகள் ரஜினியின் லிஸ்ட்டில் இல்லை.. இதுதான் புது தகவல்.

     சாத்தியமா?

    சாத்தியமா?

    அப்படியென்றால், நேற்று நாம் யூகித்தபடியே... பாமக, தேமுதிக, கமல், போன்றோர் ரஜினியிடம் இணைவார்கள் என்றே தெரிகிறது. அப்படி இணையும் பட்சத்தில் ரஜினி தலைமையிலான 3-வது அணி நிச்சயம் உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் ரஜினிக்கு சாத்தியமா? அல்லது "மறுபடியும் முதல்ல இருந்தா" நம்மை கேள்வி எழுப்ப வைத்துவிடுவாரா என்று போக போகத்தான் தெரியும்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+